வாங்க பாஸ் வறுத்தெடுப்போம்! என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா? | தி ஆல் இந்தியா பேக்சாட்

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (04/02/2015)

கடைசி தொடர்பு:16:00 (04/02/2015)

வாங்க பாஸ் வறுத்தெடுப்போம்! என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா?

பிரபல ’தி ஆல் இந்தியா பேக்சாட் நாக் அவுட்’ என்ற யூடியூப் சேனல் இந்தியாவின் அரசியல் தலைவர்கள் முதல், சினிமா பிரபலங்கள் வரை என அனைவரையும் வறுத்தெடுத்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்தியாவின் பல விஷயங்களையும் விமர்சிப்பது, மற்றும் வித்யாசமான வீடியோக்களை உருவாக்குவது என இப்போது இவர்கள் இந்தியாவில் மட்டுமல்லாமல் பக்கத்து நாடுகளிலும் பிரபலம்.

இயக்குநர்களாக குமார் தேவன்ஷு, தன்மே பட்  மற்றும் கிரியேட்டிவ் இயக்குநர்களாக கருநேஷ் தல்வார், அர்ஜுன் நாயர், இவர்களே இந்த சேனலின் முக்கியஸ்தர்கள். இவர்கள் விமர்சிப்பதில் எந்த கண்டீஷன்ஸ் அப்ளையும் இல்லை. யாரையும் விட்டு வைப்பதில்லை.சமீபத்தில் இவர்களிடம் சிக்கியவர்கள் பாலிவுட் தயாரிப்பாளர் கரன் ஜோஹர், ரன்வீர் சிங் மற்றும் அர்ஜுன் கபூர். 
 
'என்ன பாஸ் இவிய்ங்க இப்படி செய்றாய்ங்க' - என்ற ரீதியில் இவர்கள் செய்யும் காமெடி விமர்சனங்கள் பல நேரத்தில் பலரையும் கொந்தளிக்க செய்துவிடுகிறது.பதிலுக்கு, சம்பந்தபட்ட நடிகர்கள் இவர்களை வறுத்தெடுத்தாலும், 'வாங்களேன்... டீ சாப்டுவோம்' என்ற ரீதியில் கூலாக இருக்கிறார்கள். 

பொதுவாக இப்படிப் பட்ட நிகழ்ச்சிகளுக்கு விமர்சனங்கள் எழுவது சகஜம என்றாலும் தமிழில் இதுபோல் ஷோ இல்லையே என மக்களிடம் ஏக்கம் இருக்கத்தான் செய்கிறது. ( நம்மூரில் சமீபத்தில் அரங்கேறிய ’அது இது எது’ நிகழ்ச்சியின் ‘சொல்வதெல்லாம் பொய்,மேல வைக்காத கை’ என அலப்பறை ரகளை அடித்த’ என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’ நிகழ்ச்சி மட்டும் விதிவிலக்கு ) .
ஆனால், அதே மக்களிடமும் ஒரு சிக்கல் இருக்கிறது எதிர்பார்க்கும் மக்களே தங்களுக்குப் பிடித்த நடிகரை கிண்டல் செய்யும்போது கண்டிப்பாக திட்டதான் செய்வர்.
 


இதற்கு  அஜித் ,விஜய் இருவரும்தான் முதல் உதாரணம். இவர்கள் இருவரையும் கிண்டல் செய்து ஒரு ஸ்டேட்டஸ் போட்டால்கூட ரசிகர்கள் வெகுண்டெழுந்து விடுவார்கள். எனவே, இந்த நிலை மாறும் வரை கண்டிப்பாக தமிழில் இப்படி ஒரு கருத்து சுதந்திரம் கொஞ்சம் சிரமம்தான். மேலும், இங்கே உள்ள நிலை பாலிவுட்டில் இருந்து அப்படியே எதிர்மறை என்பதும் உண்மை. தமிழ் மக்கள் சற்று உணர்ச்சிவசப்படுபவர்கள். உடனே குறிப்பிட்ட இடத்தைத் தேடிச் சென்று துவம்சம் செய்யும் அளவுக்கும் போவார்கள்.

முக்கியமாக படங்களில் மாஸ் என்ற ரீதியில் தென்னிந்திய சினிமா பேர்வழிகள் செய்யும் அலப்பறைகளையாவது தட்டி கேட்கலாமே! உதாரணத்துக்கு பவன் கல்யாண் ‘அத்தாரிண்டிக்கி’ படத்தில் ரயில் நிலையத்தையே கணப் பொழுதில் வாங்கிவிடுவார்.  ’ஆம்பள’ படத்தில்... டாடா சுமோ பறக்காஸ். இதுபோன்ற அபத்தங்களையாவது தட்டி கேட்கலாம்.
 
                                                                                                                                  -ஷாலினி நியூட்டன் -

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close