’த்ரிஷ்யம்’ இந்தி ரீமேக்கில் போலீஸ் அதிகாரியாக தபு!

மோகன்லால், மீனா நடிப்பில் ஹிட் அடித்தப் மலையாள படம் ‘த்ரிஷ்யம்’. படத்திற்கு பெரும் பாராட்டு கிடைக்கவே, கன்னடத்தில் ‘த்ரிஷ்யா’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘திருஷ்யம்’ என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டு எல்லா மொழிகளிலும் ரசிகர்களின் வரவேற்ப்பை பெற்றது. இப்போது கமல்ஹாசன், கெளதமி நடிப்பில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இப்போது அடுத்தக்கட்டமாக இந்தியிலும் இப்படம் ரீமேக் ஆக உள்ளது. நிஷாகாந்த் காமத் இயக்க உள்ள இப்படத்தில் அஜய் தேவ்கன் ஹீரோவாக நடிக்கிறார். இந்தியில் போலீஸ் அதிகாரியாக தபு நடிக்கிறார். மலையாளம் மற்றும் தமிழில் இந்த வேடத்தில் ஆஷா சரத் நடித்திருக்கிறார். தெலுங்கில் இதே போலீஸ் அதிகாரி வேடத்தில் நதியா நடித்திருந்தார்.

மலையாளத்தில் கதாநாயகியாக நடித்த மீனா, தெலுங்கிலும் அதே வேடத்தில் நடித்தார். தமிழில் கெளதமியும், கன்னடத்தில் நவ்யா நாயரும் நடித்தனர். இந்தியில் கதாநாயகிக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. 

நீண்ட நாட்களாக சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்த தபு தன்னுடைய இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கியுள்ளார். சமீபத்தில் ‘ஹைதர்’ படத்தின் மூலம் ரீஎன்ட்ரி ஆன தபு ‘த்ரிஷ்யம்’ இந்தி ரீமேக்கிலும் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!