பெனாசிர் பூட்டோ வாழ்க்கை வரலாறு படத்தில் வித்யா பாலன்? | vidya balan, benazir bhuto, வித்யா பாலன், பெனாசிர் பூட்டோ, டார்ட்டி பிக்சர்ஸ்

வெளியிடப்பட்ட நேரம்: 10:22 (10/02/2015)

கடைசி தொடர்பு:10:22 (10/02/2015)

பெனாசிர் பூட்டோ வாழ்க்கை வரலாறு படத்தில் வித்யா பாலன்?

பாலிவுட்டில் சவாலான வேடங்களை எடுத்து நடிப்பவர் வித்யா பாலன். தனக்கென தனித்தன்மை, நடிப்பு , தைரியம் என இவருக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் சற்றே அதிகம். இந்நிலையில் பல முக்கிய பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்று படம் என்றாலே இயக்குநர்களின் முதல் தேர்வு வித்யாபாலன் தான்.

அந்த வகையில் தற்போது வித்யாபாலனிடம் நடிக்க கேட்டு பல வாழ்க்கை வரலாற்று படங்கள் வருகின்றன. அதில் ஒன்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பெனாசிர் பூட்டொ.

எனினும் இதுகுறித்து வித்யா பாலன் கூறுகையில், என்னிடம் பெண் சார்ந்த வாழ்க்கை வரலாற்று படங்கள் அதிக அளவில் வருகின்றன. ஆனால் இப்போதைக்கு எதிலும் நான் ஒப்பந்தமாகவில்லை. இந்த வருடமே பல படங்கள் முடிக்க வேண்டியுள்ளது. அதையெல்லாம் முடித்துவிட்டுதான் அடுத்த படம் குறித்து முடிவெடுப்பேன் என கூறியுள்ளார் வித்யா பாலன்.

எனினும் இந்த படம் எடுக்கப்பட்டால் பாகிஸ்தான் வசமிருந்து கண்டிப்பாக இடையூறுகள் உண்டு . அதே போல் பெனாசிர் பூட்டொவின் கொலையின் ரகசியங்கள் கூட வெளியாகும் என்பதால் வித்யா பாலன் தயங்குவதாகவும் பாலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன. 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close