தனுஷின் அடுத்த இந்தி படம்! | தனுஷ், இந்தி, ரஞ்சனா, ஷமிதாப், அனேகன்,

வெளியிடப்பட்ட நேரம்: 14:35 (10/02/2015)

கடைசி தொடர்பு:14:35 (10/02/2015)

தனுஷின் அடுத்த இந்தி படம்!

தேசிய விருது பெற்ற தனுஷ் அடுத்தடுத்து வித்யாச கெட்டப், இந்தியில் ப்ளாக்பஸ்டர் வெற்றி படங்கள் என இந்திய பிரபல நடிகராக மாறிவிட்டார். ரிலீஸ் ஆன ‘ஷமிதாப்’ படத்தில் தனுஷின் நடிப்பும் , வித்யாசமான கேரக்டரும் பாலிவுட் மத்தியில் பரபரப்பை கிளப்பியுள்ளது. 

ஒரே மாதத்தில் அடுத்தடுத்து தனுஷ் நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கிய ‘அனேகன்’ படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படம் பிப்ரவரி 13 எனில் அதைத் தொடர்ந்து தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘காக்கி சட்டை’ படமும் இம்மாதம் 27ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் மீண்டும் இந்தியில் மெகா ஹிட்டான ‘ரஞ்சனா’ பட இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்திலேயே ஒரு இந்தி படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். இப்படம் டிசம்பரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர்த்து தமிழில் ‘மாரி’, பிரபு சாலமன் புதிய படம் என இந்த வருடம் மட்டும் சுமார் 5க்கும் மேற்பட்ட தனுஷ் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close