மீண்டும் களம் இறங்குகிறார் ஐஸ்வர்யா ராய்!

உலக அழகி ஐஸ்வர்யா ராய் மீண்டும் நடிக்கவிருக்கிறார். அமிதாப் பச்சன் மகனான அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்ட ஐஸ்வர்யாவிற்கு, பெண் குழந்தைப் பிறந்ததும் கொஞ்ச நாட்கள் குழந்தையை வளர்ப்பதற்க்காக நடிப்பதை நிறுத்தி விட்டார்.

ஐஸ்வர்யாவின் குழந்தை ஆராத்யா வளர்ந்து விட்டார் என்பதால்,  சஞ்சய் குப்தா இயக்கத்தில் “ஜாஸ்பா” என்றப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஐஸ்.

ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகிக் கொண்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்புடன் நடந்து வருகிறது. படத்தில், அனுபம் கேர், ஷபானா ஆஸ்மி மற்றும் இர்ஃபான் கான் உள்ளிட்ட பலர் உடன் நடிக்கிறார்கள்.

பிரபல தெலுங்கு நடிகை ப்ரியா பானர்ஜி இந்தியில் அறிமுகமாகும் முதல் படம் இதுவே. படத்தில் ஷபானா ஆஸ்மியின் மகளாக நடிக்கிறார் ப்ரியா. 

மீண்டும் களம் இறங்கும் ஐஸ்வர்யாவின் இரண்டாம் இன்னிங்ஸ் தொடங்கவிருக்கிறது. மீண்டும் பழைய இடத்தினை தக்கவைப்பாரா இல்லையா என்பது படம் வெற்றி பெறுவதைப் பொறுத்தே சொல்ல முடியும். மேலும் மணிரத்னம் இந்தியில் இயக்க உள்ள படத்திலும் ஐஸ்வர்யா ராயின் பெயர் அடிபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!