கஜினி , துப்பாக்கி வரிசையில் ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த இந்தி ரீமேக்! | அனுராக் காஷ்யாப், ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த இந்திப் படம், கஜினி, ஆர்.டி.ராஜ சேகர், R.D.rajasekar, anurag kashyap, a.r.murugadoss, sonakshi sinha

வெளியிடப்பட்ட நேரம்: 13:10 (12/02/2015)

கடைசி தொடர்பு:13:10 (12/02/2015)

கஜினி , துப்பாக்கி வரிசையில் ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த இந்தி ரீமேக்!

‘கத்தி’ படத்தினைத் தொடர்ந்து அடுத்தப் படம் இந்தியில் இயக்கவிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்தப் படத்தில் சோனாக்‌ஷி சின்ஹா நடிக்கவிருக்கிறார். மேலும் பாலிவுட்டின் பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

’கஜினி’, ’துப்பாக்கி’ படத்திற்குப் பிறகு இந்தியில் அவர் இயக்கவிருக்கும் இந்தப் படத்தில் அனிருத் இசையமைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப்படத்தின் மூலம் அனிருத் தெலுங்கை தொடர்ந்து இந்தியிலும் இசையமைப்பாளராக அறிமுகமாவதும் குறிப்பிடத்தக்கது.

தமிழில் அருள் நிதி நடிப்பில் வெளிவந்த ‘மெளனகுரு’ படத்தின் ரீமேக்காக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இக்கதையில் மட்டும் சில மாற்றங்களோடு இந்திக்கு ஏற்றது போல இயக்கவிருக்கிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ்.

படத்தின் ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர் பணியாற்ற இருக்கிறார். ஏற்கெனவே இவர் ’கஜினி’ படத்தில் முருகதாஸுடன் இணைந்து பணியாற்றியவர். ‘கஜினி’ திரையுலகின் ட்ரெண்ட் செட்டிங் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இது இருவருக்கும் இரண்டாவது படம்.

மாஸ் படத்தில் பிஸியாக இருக்கிறார் ஆர்.டி.ராஜசேகர். பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு  மார்ச் மாதத்தில் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close