உலக தரத்திற்கு உயர்ந்த இந்தியப் படம்! | QISSA

வெளியிடப்பட்ட நேரம்: 12:37 (16/02/2015)

கடைசி தொடர்பு:12:37 (16/02/2015)

உலக தரத்திற்கு உயர்ந்த இந்தியப் படம்!

’QISSA’ என்ற இந்திய படம்-ஆங்கில சப்-டைட்டிலுடன் வருகிற 20ம் தேதி வெளிவரவிருக்கிறது. அரேபிய மொழியில், QISSA என்பது, பழங்கால, பண்பாடு மிக்க கதைகளைக் குறிக்கும். இப்படத்தை அனுப் சிங் எழுதி இயக்கியுள்ளார்.

முன்னர் இவர் இயக்கிய “டஸ்யா தி ஜெண்டில் டான்ஸ்” என்ற குறும்படம் ஜெர்மன் படவிழாவில் பரிசுபெற்றது. அதுமட்டுமில்லாமல் இவர் இயக்கிய முதல் முழு நீள திரைப்படம், “ தி நேம் ஆஃப் ரிவர்” 50க்கும் மேற்பட்ட உலக திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டுகளை அள்ளியது.

இவரின் அடுத்தப் படைப்புதான் QISSA. இந்தியப் படங்களில் மட்டுமின்றி , உலகப் படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகரான இர்ஃபான் கான் இப்படத்தில் நடித்துள்ளார். அம்பர் சிங் என்ற வேடத்தில் சீக்கியராக இப்படத்தில் நடிக்கிறார் இர்ஃபான்.

மூன்று பெண் குழந்தைகளை பெற்ற அம்பர் சிங், நான்காவது குழந்தையாவது ஆணாக பிறக்க வேண்டும் என எதிர்பார்க்க, அந்த குழந்தையும் பெண்ணாக பிறக்கிறது. அதனை, ஆண் பிள்ளை போலவே வளர்க்க முற்படுகிறார், அம்பர் சிங். 1947-ஆம் ஆண்டு, சுதந்திரம் கிடைத்த கையோடு பிளவு பட்டு நின்ற நம் நாட்டின் நிலை பற்றி ஒரு நாட்டு பற்று கொண்ட சீக்கியரின் கண்ணோட்டத்தில் இப்படத்தின் கதை நகர்கிறது.

பிரிவினை காரணமாக, பிறந்த மண்ணை விட்டு விட்டு, வேறு இடம் செல்ல வேண்டிய நிலையில் பலர், பெரும் சோகத்தில் தள்ளப்படுகின்றனர். அம்மாதிரியான உணர்வுகளால் உந்தபட்ட அம்பர் சிங்கை சுற்றிய கதையே ’QISSA’.

இப்படத்தினை பீட்ரைஸ் தெரிட் இசையமைக்க, சபாஸ்டியன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தை நேஷனல் ஃபிலிம்ஸ் டெவலப்மெண்ட் கார்பரேஷன் நிறுவனம் வெளியிடுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close