மீண்டும் முத்தச் சர்ச்சையில் சிக்கிய ராம் ஜெத்மலானி!

மும்பையில் நடந்த விருது வழங்கும் விழாவில் பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, பிரபல பாடகரான கிஷோர் குமாரின் மனைவி லீனாவுக்கு உதட்டில் முத்தம் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹம் லோக் விருது வழங்கும் விழா மும்பையில் நடைபெற்றது. சின்னத்திரை நட்சத்திரங்கள் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்ட இவ்விருது வழங்கும் விழாவில் பல நட்சத்திரங்கள் பங்கு பெற்றனர். வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி பிரபல இந்திப் பாடகர் கிஷோர் குமாரின் மனைவியான லீனாவை அனைவரின் முன்னிலையிலும் உதட்டில் முத்தமிட்டார்.

 வந்திருந்த நட்சத்திரங்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். நடிகை லீனா பாடகர் கிஷோரை மணமுடித்த சில நாட்களிலேயே கணவரை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு பிரபல பாலிவுட் நடிகர் தர்மேந்திராவுக்கும் உதட்டில் முத்தமிட்டு அதிர்ச்சியை கிளப்பியவர் வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி.  தற்போது மீண்டும் முத்த சர்ச்சையில் சிக்கியுள்ளார். இவரின் முத்தமிடும் படங்கள் இணையத்தில் தீயாக பரவிவருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!