என்னது டெல்லி முதலமைச்சர், பாலிவுட் படத்திலா - ஒரு பகீர் ஃப்ளாஷ் பேக் !

பாலிவுட் திரையுலகம் மட்டுமில்லை; ஒட்டுமொத்த இந்தியாவுமே படபடப்புடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது, ‘டர்ட்டி பாலிடிக்ஸ்’ திரைப்படத்தை. இரண்டு காரணங்கள்...  ஒன்று, மல்லிகா ஷெராவத்; இன்னொன்று, அர்விந்த் கெஜ்ரிவால்.

‘என்னது டெல்லி முதலமைச்சர், பாலிவுட் படத்திலா’ என்று வியப்பவர்களுக்கு ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்!

டெல்லியில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 67 இடங்களில் வெற்றி பெற்று, டெல்லி முதலமைச்சர் நாற்காலியில் கெஜ்ரிவால் அமர்வதற்கு சரியாக ஒரு வருடத்துக்கு முன்பு, ‘டர்ட்டி பாலிடிக்ஸ்’ திரைப்படத்தின் இயக்குநர் கே.சி.பொக்காடியா, கெஜ்ரிவாலை அணுகினார். ‘‘இந்த கேரக்டர் ஒரு உண்மையான அரசியல்வாதியை அப்படியே பிரதிபலிக்கும். எனவேதான் உங்களைத் தேடி வந்தேன். எனக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கி நடித்துத் தர வேண்டும். இதில் நீங்கள் நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும்!’’ என்கிறார் இயக்குநர்.

‘‘மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றுதான் நான் அரசியல் துறையைத் தேர்ந்தெடுத்தேன். சினிமா துறை எனக்கு செட் ஆகாது!’’ என்று கதையை முழுதாகக் கேட்கும் முன்னரே பலமாக மறுத்துவிட்டாராம் கெஜ்ரிவால்.

‘‘கெஜ்ரிவால், ஒரு நேர்மையான அரசியல்வாதி, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் ஒரு நல்ல தலைவர் அவர். அவரை மனதில் வைத்துத்தான் இந்த கேரக்டரை உருவாக்கினேன்!’’ என்று ஸ்டேட்மென்ட் விடுக்கிறார் பொக்காடியா.

இப்போது கெஜ்ரிவால் கேரக்டரில் நடித்திருப்பவர், நஸ்ருதீன்ஷா.


- தமிழ் -

Do you like the story?

Please Appreciate the Author by clapping!