வெளியிடப்பட்ட நேரம்: 13:11 (04/03/2015)

கடைசி தொடர்பு:13:11 (04/03/2015)

பாலிவுட் நடிகையை மணக்கிறார் ஹர்பஜன் சிங்!

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்குக்கு இந்த மாத இறுதிவாக்கில் திருமணம் நடைபெறவுள்ளது. பாலிவுட் நடிகை கீதா பசாராவை மணக்கவிருக்கிறார். 

தற்போது 34 வயதான ஹர்பஜன்சிங், தனது நீண்ட கால தோழியான கீதா பசராவை மணம் புரிய உள்ளார். ஹர்பஜனும்,கீதாவும் நீண்ட காலமாக காதலித்து வருவதாக அவ்வப்போது மீடியாக்களில் செய்தி வருவது உண்டு. ஆனால் இதனை இருவருமே மறுத்து வந்தனர். எனினும் ஹர்பஜன் ஆடும் போட்டிகளை காண கீதா வருவது உண்டு. ஐ.பி.எல். போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஹர்பஜன் சிங் விளையாடும் போது கீதாவும் உடன் வருவார்

தற்போது இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த மாத இறுதியில் இவர்கள் திருமணத்தை நடத்த குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.

“தில் தயா ஹய்” என்ற ஹிந்தி படத்தின் மூலம் அறிமுகமான கீதா பசாரா,  “தி டிரென்”, “ ஃபையாஜி சூப்பர் ஹிட்” உள்ளிட்ட சில ஹிந்தி மற்றும் பஞ்சாபி திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்