காத்ரீனாவுக்கு மெழுகு சிலை!

பாலிவுட் நடிகை காத்ரீனா கைப்பிற்கு விரைவில் மெழுகு சிலை உருவாகவுள்ளது. பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள மடாமி துஷாட்ஸ் என்ற அருங்காட்சியகத்தில் சிலை வைக்கப்படவுள்ளது.

அமிதாப் பச்சன், ஐஸ்வர்யாராய், கரீனா கபூர், ஷாருக்கான், ரித்திக்ரோஷன் மற்றும் சல்மான் கான் ஆகியோருக்கு ஏற்கெனவே மடாமி துஷாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக காத்ரீனாவிற்கு மெழுகு சிலை வைக்கவுள்ளனர்.

இதற்காக சமீபத்தில் காத்ரீனாவின் அளவு எடுக்கப்பட்டிருந்தது. காத்ரீனா நடனமாடுவது போல மெழுகில் சிலை உருவாகபோவதாக மடாமி துஷாட்ஸ் ட்விட்டர் சமுக வளைதளத்தில் தெரிவித்துள்ளது.

1,50,000 பிரிட்டிஷ் பவுண்டுகள் மதிப்பில் 20 சிற்ப கலைஞர்களின் கலை வண்ணத்தில் மெழுகு சிலை உருவாக்கப்பட்டு, மார்ச் இறுதிக்குள் அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!