இந்திக்குச் செல்லும் மங்காத்தா! | இந்தி சினிமா, மங்காத்தா, அஜித், வெங்கட் பிரபு, ajithkumar, venkat prabhu, mankatha

வெளியிடப்பட்ட நேரம்: 12:24 (05/03/2015)

கடைசி தொடர்பு:17:50 (25/03/2015)

இந்திக்குச் செல்லும் மங்காத்தா!

அஜித் நடிப்பில் வெளியான “மங்காத்தா” படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இந்தியில் ரீமேக் செய்யவிருக்கிறது.

அஜித், அர்ஜூன், த்ரிஷா, லட்சுமி ராய், பிரேம்ஜி அமரன், உள்ளிட்ட பலர் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான படம் மங்காத்தா. இப்படத்தை யுவன் இசையமைக்க, க்ளவுட் நைன் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

படம் தொழில் ரீதியில் வசூல் சாதனைப் படைத்தது. அதனால் இப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் கைப்பற்றி முதன் முறையாக இந்தியிலும் பட தயாரிப்பில் இறங்குகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற ஆரம்பித்திருக்கின்றன. மேலும் நடிக்கவிருக்கும் நடிகர், நடிகைகள் யார் என்பது விரைவில் தெரிய வரும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close