எவ்வளவு மறைத்தாலும் படத்துக்கு ‘ஏ’ சர்டிபிகேட் தான்!

செக்ஸி காமெடி படமாக உருவாகும் இந்தி படம் ’ஹன்டர்’. ஹர்ஷவர்தன் குல்கர்னி இயக்கியிருக்கும் இப்படம் வரும் வெள்ளிக்கிழமை (மார்ச் 20) வெளியாகவிருக்கிறது.

’ஹன்டர்’ முழுக்க முழுக்க செக்ஸி காமெடி படமாகவே உருவாகியிருக்கிறது. டிரெய்லரிலேயே அதிகப்படியான வார்த்தைகள் செக்ஸியாகவே இருக்கிறது. அதனால் படத்திலிருக்கும் சில வசனங்களை குறைக்கச் சொல்லியும், சில வசனங்கள் வரும் காட்சிகளில் பீப் ஒலி இடச் சொல்லியும் கூறியுள்ளது சென்சார் போர்டு.

தயாரிப்பு நிர்வாகம் கூறும் போது, “ படத்தில் அதிகப்படியான வசனம் கவர்சியாக இருப்பதால் அதை மாற்றவிருக்கிறோம். அந்த வசனத்திற்கு பதில் வேறு வசனத்தையோ அல்லது பீப் ஒலி அமைக்கும் வேலையை செய்து வருகிறோம்” என்றனர். இதனால் நடிக நடிகைகள் மீண்டும் டப்பிங் வேலைகளில் இறங்கியிருக்கின்றனர். எனினும் படத்திற்கு சென்சார்  “A” சான்றிதழ் வழங்கியிருக்கிறது.

அனுராக் காஷ்யாப் உள்ளிட்ட ஆறு தயாரிப்பாளர்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் குல்ஷன் டேவைய்யா மற்றும் ராதிகா அப்தே நடித்திருக்கிறார்கள். ராதிகா அப்தே தமிழில் ‘அழகு ராஜா’ படத்தில் மற்றொரு நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!