‘‘இந்திரா காந்தியாக நடிக்க ஆசை!’’ - மல்லிகா ஷெராவத்

மல்லிகா ஷெராவத்தின் கவர்ச்சி பாலிடிக்ஸுக்காகவே ‘டர்ட்டி பாலிடிக்ஸ்’ படம் பாலிவுட்டில் சூப்பர் ஹிட். ஆனால், ‘‘எனக்குக் கவர்ச்சியாக நடித்து போரடித்து விட்டது!’' என்று மும்பையில் நடந்த ‘டர்ட்டி பாலிடிக்ஸ்’ சக்சஸ் மீட்டில் மல்லிகா ஷெராவத் கூறியிருக்கிறார்.

‘‘எந்த மாதிரி கதையில் நடிக்க உங்களுக்கு விருப்பம்?’’ என்ற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு அவர், ‘‘எனக்கு இந்தியில் சமீபத்தில் வெளிவந்த ‘பாக் மில்கா பாக்’ படம் ரொம்பவும் பிடித்திருக்கிறது. அதுபோல் ‘பயோபிக்’ கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்று விருப்பம். 


இந்தியப் பெண் தலைவர்களில் என்னை மிகவும் கவர்ந்தவர் அன்னை இந்திரா காந்தி. அவரது துணிச்சல் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. இந்திரா காந்தியின் வரலாற்றைப் படம் எடுத்தால், சம்பளத்தில் பாதி குறைக்கவும் தயார்!’’ என்று ஸ்டேட்மென்ட் விட்டிருக்கிறார்.

ஆனால், மல்லிகாவின் கால்ஷீட் கிடைக்க வேண்டுமென்றால், தயாரிப்பாளர்கள் அமெரிக்காவுக்குத்தான் பறக்க வேண்டும். காரணம், மல்லிகா பழையபடி தனது ஜாகையை அமெரிக்காவுக்கு மாற்றப் போகிறாராம்.

- தமிழ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!