பால்கே விருது பெறும் இந்தி நடிகர்! | இந்தி நடிகர், பால்கே விருது , சசி கபூர், shasi kapoor, balke award

வெளியிடப்பட்ட நேரம்: 12:43 (24/03/2015)

கடைசி தொடர்பு:16:22 (25/03/2015)

பால்கே விருது பெறும் இந்தி நடிகர்!

மூத்த இந்தி நடிகர் சசிகபூருக்கு 2014ம் ஆண்டிற்கான தாதா சாஹேப் பால்கே விருது வழங்கப்படவுள்ளது.

நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என்று பல்முனைகளில் பணியாற்றியவர். 77வயதான இவருக்கு 46வது தாதா சாஹேப் பால்கே விருதை இந்திய அரசு வழங்குகிறது. இந்திய சினிமாவின் வளர்ச்சியில் இவரின் பங்கிற்காக இவ்விருது வழங்கப்படவுள்ளது. 

முன்னதாக 2011ல் பத்மபூஷன் விருதினை அரசு வழங்கி பெருமைபடுத்தியுள்ளது. இதுவரை மூன்று முறை தேசிய விருதினையும், பல ஃபிலிம் பேர் விருதினையும் பெற்றவர். நூற்றுக்கும் மேற்பட்ட இந்திப் படங்களில் நடித்தவர் சசி கபூர் என்பது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close