ஷாகித்துக்கு விரைவில் கல்யாணம்.... | ஷாகித் கபூர், பாலிவுட் நடிகர், ஹைதர், haider, shahid kapoor, bollywood

வெளியிடப்பட்ட நேரம்: 17:55 (24/03/2015)

கடைசி தொடர்பு:18:06 (26/03/2015)

ஷாகித்துக்கு விரைவில் கல்யாணம்....

இந்தி நடிகர் ஷாகித் கபூருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. ' இஷ்க் விஸ்க்’ படம் மூலம் சினிமாவில் எண்ட்ரி ஆனவர் ஷாகித் கபூர். அறிமுகமான முதல் படத்திலேயே ஃபிலிம்ஃபேர் சிறந்த அறிமுக நடிகர் விருதை தட்டினார்.

தொடர்ந்து பல இண்டி படங்களில் நடித்தவர். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘ஹைதர்’ படத்திற்கு சிறந்த நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருதையும் தட்டினார். ஷாகித்துக்கு எப்போது கல்யாணம் என பலரும் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு விடாமல் கேட்டனர்.

 

தற்போது அதற்கு பதில் கிடைத்துள்ளது. டில்லியச் சேர்ந்த மீரா ராஜ்புத் என்பவரை விரைவில் மணக்க உள்ளார். ஆங்கிலம்(ஹானர்ஸ்) மூன்றாம் ஆண்டு படித்துவருகிறார் மீரா. ஒரு சந்திப்பில் ஷாகித் நன் சினிமா அல்லாத பெண்ணையே திருமணம் செய்வேன் என கூரினார். தற்போது அது உறுதியாகியுள்ளது. மேலும் இரு வீட்டாரும் ஒன்று கூடி டிசம்பரில் திருமணம் என முடிவு செய்துள்ளனர். எனினும் தேதியை ஷாகித் கபூர் இன்னமும் ரகசியமாக வைத்திருக்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close