மீண்டும் வருகிறார் ஐஸ்வர்யா ராய்!

ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளிவரவிருக்கும் ஜஸ்பா படத்தின் வெளியீட்டு தேதி அறிவித்தார் படத்தின் இயக்குநர் சஞ்சய் குப்தா.

ஜஸ்பா படத்தின் இயக்குநரான சஞ்சய் குப்தா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அக்டோபர் 9ம் தேதி படம் வெளியாகும். அதற்கான கவுண்டவுன் ஆரம்பித்துவிட்டது என்று ட்விட் செய்துள்ளார்.

ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படமாக வெளியாகவிருக்கும் இப்படத்தில் ஐஸ்வர்யாராய் வக்கீல் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இதற்கான ஆக்‌ஷன் காட்சிகள் தனிப்பட்ட அக்கறையுடன் படமாக்கப்பட்டுவருகிறதாம்.

சவன் டேஸ் என்ற கொரியன் படத்தின் தழுவலே இந்தப்படம் ஹிந்தியில் எடுக்கப்படுகிறது. மேலும் அடுல் குல்கர்னி, சித்ஹாந்த் கபூர், இர்ஃபான் கான் உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!