யார் என்ன சொன்னால் என்ன? கரம் கோர்த்து வந்திறங்கிய கோலி-அனுஷ்கா

லகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியிடம் படுதோல்வியை சந்திக்க விராட் கோலி சரியாக ஆடாமல் போனதே காரணம் என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதனால் இந்த போட்டியை பார்க்க அரையிறுதி நடந்த சிட்னி நகருக்கு சென்ற நடிகையும், விராட் கோலியின் காதலியுமான அனுஷ்கா சர்மாவை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் வசை பாடினர். சமூக வலைதளங்களில் அனுஷ்காவை கண்டபடி திட்டினர்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்திய அணி நேற்று நள்ளிரவு இந்தியா வந்தடைந்தது. மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கிய வீரர்கள், பலத்த பாதுகாப்புடன் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்திய அணியின் துணைக்கேப்டன் விராட் கோலியும், அவரது காதலி அனுஷ்கா சர்மாவும் ஒருவருடன் ஒருவர் கரம்கோர்த்தப்படி , ஒருவித பதைபதைப்புடன் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தனர். பின்னர் சிறப்பு பாதுகாப்புடன் விராட் கோலி, மும்பையில் உள்ள அனுஷ்கா சர்மா வீட்டுக்கு சென்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!