ஷாருக்கானின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா? | sharukhan

வெளியிடப்பட்ட நேரம்: 16:46 (28/03/2015)

கடைசி தொடர்பு:16:50 (28/03/2015)

ஷாருக்கானின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

டிவி நிகழ்சியின் மூலம் அறிமுகமாகி சினிமாவில் சூப்பர் ஸ்டாராக மாறியவர் ஷாருக்கான்.  பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் மட்டுமல்லாமல் விலை உயர்ந்த பாலிவுட் நடிகராக மாறி நிற்கிறார் ஹாருக்கான்.

ஷாருக்கான் தற்பொழுது நட்சத்திரங்கள் கலந்துகொள்ளும் ஒரு கேம்- ஷோவிற்கு நிகழ்ச்சி தொகுப்பாளராக வருகிறார். இந்த நிகழ்ச்சியில் ஷாருக்கான் தன்னுடைய ஆரம்ப கால வாழ்க்கையை பகிர்ந்து கொண்டார். ஷாருக்கான் செய்த முதல் வேலை, அதற்கான சம்பளம் பற்றி கேட்டதற்கு எதிர் பாராத அவர் பதில் தான்.

நான் ஆரம்பத்தில் தியேட்டரில் டிக்கெட் விற்றேன். அப்போ எனக்கான சம்பளம் 50 ரூபாய் கிடைக்கும்,  அதுவே அப்போது ரொம்ப பெரிய விஷயம் எனக்கு, ” என்று பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்டார் ஷாருக். 

இந்நிகழ்ச்சியில் அலியாபட் மற்றும் கரன் ஜோகர் மற்றும் அனுஷ்கா ஷர்மா ஆகியோர் கலந்துகொண்டனர் குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close