ட்ரெண்டான ஷாருக்!

இணையதள உலகில் அரசியல், சினிமா இரு புறமும் ஏதேனும் ஒரு ட்ரெண்டை க்ரியேட் பண்ணி மக்கள் மத்தியில் பிரபலமாவது ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு முக்கிய அந்தஸ்த்தாக மாறிவிட்டது. இந்நிலையில் இந்திய அளவில் யார் ட்விட்டர் முக நூல் உள்ளிட்ட தளங்களில் அதிக ஃபாலொயர்களை பெறுகிறார்கள் என்பது ஒரு யுத்தமாகவே மாறிவிட்டது.

அதிலும் ட்விட்டரில் அதிகம் ஃபாலோயர்கள் வைத்திருப்பவர்கள் தான் இளைஞர்கள் மத்தியில் பிரபலமடைய முடியும். இந்த வகையில் இந்திய அளவில் ஷாருக் ட்ரெண்டாகி உள்ளார். காரணம் ட்விட்டரில் 12 மில்லியன் அதாவது ஒரு கோடியே 20 லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபாலோயர்களை பெற்றுள்ளார் ஷாருக்.

இதை முன்னிட்டு #SRK12Million என்ற டேக்கில் இந்திய ட்ரெண்டில் இணைந்துள்ளார் ஷாருக். மேலும் 13.9 மில்லியன்களுடன் இவருக்கு முன் அமிதாப் பச்சன் இருக்கிறார். தொடர்ந்து மூன்றாம் இடத்தில் சல்மான் கான் இருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!