வித்யாபாலன் கனவு நினைவாகுமா? | vidyabalan

வெளியிடப்பட்ட நேரம்: 15:29 (30/03/2015)

கடைசி தொடர்பு:15:48 (30/03/2015)

வித்யாபாலன் கனவு நினைவாகுமா?

தேசிய விருது பெற்ற இந்தியின் பிரபல நடிகை வித்யாபாலன். தமிழ் சினிமாவில் நட்சத்திரமாக ஜொலிக்க ஆசையுடன் இருக்கிறேன் என ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

“குரு”, “பாபி ஜாசூஸ்”, “நோ ஒன் கில்ட் ஜெஸிக்கா” , ‘பா’ உள்ளிட்ட பல படங்களில் வித்தியாசமான கதைக் களத்தில் நடித்தவர் வித்யாபாலன்.  தமிழ் பேசத்தெரிந்த, மலையாளத்தை தாய் மொழியாக கொண்டவர். இருந்தாலும் மலையாளத்தில் கூட குறைவான படங்களே நடித்துள்ளார்.

’டார்டி பிக்சர்’ மூலம் தேசிய விருது பெற்றது மட்டுமின்றி சவாலான சில்க் ஸ்மிதா கேரக்டரில் இந்தி ரசிக்ர்கள் மட்டுமின்றி இந்திய ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தார்.

அதனால் தமிழில் நல்ல கதையம்சமுள்ள படமாக இருந்தால் நடிக்கத்தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார். தமிழில் வித்யாபாலனை நடிகையாக அறிமுகப்படுத்தவிருக்கும் இயக்குநர் யார் என்பதே இப்போதைக்கு பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close