ஆடை, திருமணம், தனிமை லெஸ்பியன்... சர்ச்சையைக் கிளப்பிய தீபிகா படுகோனே குறும்படம்! | deepika's short film doing, created issues..

வெளியிடப்பட்ட நேரம்: 14:53 (31/03/2015)

கடைசி தொடர்பு:14:58 (31/03/2015)

ஆடை, திருமணம், தனிமை லெஸ்பியன்... சர்ச்சையைக் கிளப்பிய தீபிகா படுகோனே குறும்படம்!

ந்தியப் பெண்கள் தங்களின் ஆடை,திருமண வாழ்க்கை,தனித்து இருப்பது அல்லது லெஸ்பியனாக இருப்பது ஆகியவற்றில் சுந்திரமாக முடிவெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ள குறும்படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் வரவேற்பையும் எதிர்ப்பையும் பெற்றுள்ள இந்தக் குறும்படம் 2 நாளில் 33 லட்சத்து 55 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.பெண்கள் சுதந்திரம் வரவேற்க வேண்டிய ஒன்றுதான் என்றாலும் வரம்பு மீறும் ஆண்களைப்போல பெண்களின் சுதந்திர நடவடிக்கையும் மாறிவிடக் கூடாது என்ற கருத்துக்களும் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.   

அலியாபட் மற்றும் மாதுரி தீட்சீத்துக்கு அடுத்த படியாக தீபிகா படுகோனே பெண்கள் மேம்பாட்டுக்கான ஒரு குறும்படத்தில் நடித்து உள்ளார். அதன் தலைப்பு ”மை சாய்ஸ்’ காக்டெய்ல்  மற்றும் பென்னி நிறுவனம் தயாரித்து உள்ளது. ஹோமி அடஜனியா என்பவர் இந்தப் படத்தை இயக்கி உள்ளார்.

கருப்பு வெள்ளையில் தயாராகி உள்ள இந்தக்  குறும்படத்தில் 29 வயது நடிகை தீபிகா படுகோனே கூண்டில் அடைபட்ட எண்ணங்களை விடுமாறு பெண்களுக்கு அழைப்பு விடுத்து  பரபரப்பை உண்டாக்கியுள்ளார்.பெண்கள் தங்களின்  தொழில் மற்றும் வாழ்க்கை முறைக்காகவே  ஆடை அணிகிறார்கள்  அதை ஆபாசம் என  ஆண்களோ அல்லது பெண்களோ முடிவு செய்ய வேண்டாம் என்று படத்தில் தோன்றி கூறுகிறார்.

 ”நான் விரும்பும் வகையில், வாழ்வது எனது விருப்பம்  எந்த ஆடையை அணிய வேண்டும் என்பது எனது விருப்பம், எனது உடலுக்கு எது ஏற்றது என்பது நான் முடிவு செய்வேன். நான் எப்போது திருமணம் செய்வேன் அல்லது நான் தனிமையில் வாழ்வேன் அல்லது நான் லெஸ்பியனாக இருப்பேன் என அனைத்தும்  எனது முடிவு. ”என அந்த வீடியோவில் கூறி உள்ளார்.

குறும்படத்தில் பல்வேறு  துறைகளில் உள்ள 99 பெண்கள் காட்டப் படுகின்றனர். அவர்கள் தங்களது வேலையைத்  தேர்வு செய்தது, அவர்கள் என்ன  அணிவது, எப்படி பார்ப்பது, திருமணம் செய்து கொள்வதா வேண்டாமா என முடிவு செய்வது, குழந்தை வேண்டுமா வேண்டாமா என முடிவு செய்வது என்பது குறித்துக்  கூறுகிறார்கள்.

சமுதாயத்தில் பெண்கள் நெற்றியில் பொட்டு வைப்பதைக்  குறும்படம் நினைவூட்டுகிறது. விரல்களில் மோதிரம் அணிவது, கணவனின் பெயரைத்  தன்னுடைய பெயருடன் சேர்த்து கொள்வது. அது வெறும் சடங்காக உள்ளன அதை எப்போது வேண்டுமானாலும் தூக்கி எறியலாம் என்றும்  குறும்படம் கூறுகிறது.

இந்த வீடியோ யூ டியூப்பில் பதிவேற்றப்பட்ட 2 நாளில் 3 லட்சத்திற்கு மேற்பட்டோர்  பார்த்து உள்ளனர் அமிதாபச்சன், அர்ஜூன் ராம்பால், பர்கான் அக்தர், கரன் ஜோக்கர் உள்பட பல பாலிவுட் பிரபலங்கள் இதனை  தங்களின் வலை தளங்களில் பகிர்ந்து உள்ளனர்.

குறும்படம் குறித்து படுகோனே கூறுகையில்  “இது எனது தனிப் பட்ட எண்ணம். தற்போது பெண்கள் கூண்டில் அடைக்கப்பட்ட எண்ணங்களில் இல்லை.  நீங்கள் அதிகமான எதிர்பார்ப்புகளுடன் இருக்க கூடாது உங்கள் மனத்தில் என்ன தோன்றுகிறதோ அதுபடி செயல்படுங்கள். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க கூடிய செயல்களை மட்டும் செய்யுங்கள்"என்று கூறியுள்ளார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close