“ஓரினச் சேர்கையாளர் கதைக்களம்” - இந்தியாவில் தடை செய்யப்பட்ட லிஸ்டில் மற்றொரு படம்...

இயக்குநர் ராஜ் அமிட் குமார் இயக்கியிருக்கும் படம் “அன்- ஃப்ரீடம்” (Un-Freedom). இந்தப் படம் இந்தியாவில் வெளியாவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

லைஃப் ஆஃப் பை படத்தில் நடித்த ஹூசைன் மற்றும் விக்டர் பனர்ஜி, பானு உதே உள்ளிட்ட பல இந்தியர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். 36 வயதுடைய இந்தியாவை தாய்மொழியாக கொண்ட ஃபுளோரிடாவைச் சேர்ந்தவர் ராஜ் அமிட் குமார். ஓரினச் சேர்க்கையாளரை மையப்படுத்திய கதை நகர்வதால் இப்படம் இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் படத்தை வெளியிடுவதற்காக சென்சார் பார்வைக்கு சமீபத்தில் சென்றது. அடிப்படை மனித உரிமைகளின் கீழ் இப்படத்தினை இந்தியாவில் திரையிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் மிகுந்த ஏமாற்றத்தில் இருப்பதாக இயக்குநர் ராஜ் அமிட் குமார் கூறியுள்ளார்.

என் அனுபவத்தில் மக்களிடம் பார்த்த கொடுமைகள், பொய், முரண்பாடுகளைக் கொண்டே இந்தப் படத்தினை உருவாக்கியுள்ளேன். இப்படத்தினை தடை செய்வதற்குப் பதில் குறிப்பிட்ட சான்றிதழுடன் சில காட்சிகளை நீக்கி திரையிட வழிசெய்யலாம் என்கிறார் இயக்குநர். இப்படத்திற்கான டிரெய்லர் இணையத்தில் வெளியானது. அதில் ஒரு காட்சியில் “இந்தியாவில் ஒவ்வொரு அரை மணிநேரத்திற்கும் ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறாள்” என்ற வசனங்கள் அமைந்துள்ளது.


நியூயார்க் நகரம் மற்றும் புது டெல்லி என்று இரு வேறு கதைத்தளம், லெஸ்பியன் மற்றும் இருபால் சேர்க்கையாளரான இருவருக்குமிடையேயான காதல், முஸ்லீம் பிரச்னைகள் என்று நகர்கிறது படம். கவிஞர் அகமது பையாஸ் எழுதிய “ Ye dagh dagh ujala" என்ற கவிதையின் தாக்கத்திலேயே இப்படத்தினை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்.

சென்சார் போர்டின் தேர்வாணையம் குழு (Examining Committe) இப்படத்திற்கு சான்றிதழ் தருவதற்கே தகுதி இல்லை என்று கூறியுள்ளது. பின்னர் ரிவைசிங் கமிட்டி படத்தினை பார்வையிட்டு, சில காட்சிகளை நீக்கி A சான்றிதழுடன் படத்தினை வெளியிடலாம் என்று கூறியுள்ளது. அதனால் இப்படத்தினை தடை செய்வது சரியில்லை என்கிறார்கள் படக்குழுவினர்.

இதைப்போலவே அமெரிக்காவில் வெளியான “ஃபிப்டி ஷேட்ஸ் ஆஃப் கிரே” படத்தில் ஆபாஷமான  காட்சிகள் அதிகமான இருப்பதாக இந்தியாவில் வெளியாக தடைவிதிக்கப்பட்டது.

தமிழகத்தில் கமல்ஹாசன் இயக்கத்தில் வெளியான “விஸ்வரூபம்” படத்திற்கும் ஆரம்பத்தில் தடைவிதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. முஸ்ஸீம் மக்களை இழிவுபடுத்தும் காட்சிகள் நிறைந்திருப்பதாக சர்ச்சைகள் வெளியானது.

இந்தியாவின் ஒரு படம் வன்முறை, ஒரு குறிப்பிட்ட சமுகத்தினை இழுவிபடுத்தியே, பாலியல் சார்ந்த படமாக இருந்தால் தடைவிதிக்கப்படுகிறது. ஆனால் அனைத்து தரப்பு இயக்குநர்களும் உண்மை நிகழ்வை அப்படியோ காட்சிபடுத்தினாலோ தனிப்பட்ட மனிதனின் விருப்பத்தை அப்படியோ படமாக்கினால் தடை செய்வது நியாயமற்ற கூற்றாகவே கருதிவருகின்றனர்.

எப்படியிருந்தாலும் “அன்- ஃப்ரீடம்” படம் மே29ல் அமெரிக்க திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்தியாவில் வெளியாகுமா என்பது பொருத்திருந்து தான் பார்க்கவேண்டும். 

பி.எஸ்.முத்து

Do you like the story?

Please Appreciate the Author by clapping!