மனைவியின் படத்தில் கணவர்!
குழந்தை பிறப்பால் நடிப்புக்கு முழுக்குப் போட்டிருந்த ஐஸ்வர்யாராய் மீண்டும் நடிப்பில் இறங்கியிருக்கிறார். சஞ்சய்குப்தா இயக்கும் த்ரில்லர் படமான “ஜாஸ்பா” என்ற படத்தில் நடித்துவருகிறார்.
இந்தப்படத்தில் ஐஸ்வர்யாவின் கணவரும் அமிதாப் பச்சனின் மகனுமான அபிஷேக் பச்சன் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளார். இது குறித்து சஞ்சய்குப்தா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “ஜாஸ்பா படத்தின் ஒரு காட்சிக்காக அபிஷேக் பச்சனை வைத்து ஷூட் செய்தது மிகவும் மகிழ்ச்சியான அனுபவம்” என்று கூறியுள்ளார்.
கதாநாயகனாக இர்பான் கான் நடிக்கிறார். அனுபம் கெர், ஷபானா, அடுல் குல்கர்னி மற்றும் ஜான் ஆபிரகாம் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். படம் வரும் அக்டோபர் 9ல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.