ஏ.ஆர்.முருகதாஸ் படத்திலிருந்து விலகினார் தபு! | tabu came out from a.r. film

வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (04/04/2015)

கடைசி தொடர்பு:18:02 (06/04/2015)

ஏ.ஆர்.முருகதாஸ் படத்திலிருந்து விலகினார் தபு!

‘கத்தி’ படத்திற்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இந்தியில் இயக்கி வரும் படம் ‘அகிரா’. தமிழில் வெளிவந்த ‘மௌனகுரு’ படத்தின் ரீமேக்தான் இது. இந்தியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு வரும் இப்படத்தில் சோனாக்ஷி சின்ஹா அறிவுநிதி கெட்டப்பில் நடித்து வருகிறார்.

பாலிவுட்டின் பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யாப்பும் இப்படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து வருகிறார். மேலும், இந்தி நடிகை தபுவும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது.

தற்போது இப்படத்திலிருந்து தபு விலகியுள்ளார். தபு மலையாளத்தில் வெற்றிபெற்ற ‘திரிஷ்யம்’ படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

 

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதால், முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்க முடியாமல் போனதாக தபுவுக்கு நெருங்கி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.எனினும் சிலர் தபுவின் பாத்திரம் எதிர்பார்த்த அளவு இல்லை என சிலர் கூறுகின்றனர். ஏனெனில் தபு எப்போதும் தனது கதாபாத்திரங்கள் கணமாக இருக்க வேண்டும் என நினைப்பவர்.

இப்படத்தில் நடிகை ராய் லட்சுமியும் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close