மல்லிகா ஷெராவத்துக்கு லம்போகினி கார் பரிசு - கொடுத்தது யார்?

 

‘டர்ட்டி பாலிடிக்ஸ்’ படத்திற்குப் பிறகு எங்கேயும் கண்ணில் படாமல் இருந்த மல்லிகா ஷெராவத், திடீரென்று வெள்ளை நிற லம்போகினி அவென்டடார் காரில் நின்று ட்விட்டரில் உற்சாக போஸ் கொடுத்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. வியப்பிற்குக் காரணம் - 8 கோடி ரூபாய் செலவில் லம்போகினி வாங்கும் அளவுக்கு மல்லிகாவிடம் பணம் இல்லை என்பது பாலிவுட்டுக்கே தெரியும்.

அவருக்கு இது காதலர் தினப் பரிசாகக் கிடைத்திருப்பதைத்தான் அனைவரும் கண், காது வைத்துப் பேசுகிறார்கள். ‘‘இந்த கார் எனக்கு காதலர் தினப் பரிசுதான். ஆனால், எனக்கு கார் பரிசளித்த அந்த நபர் யார் என்று இப்போது வெளியே சொல்ல நான் கடமைப்படவில்லை. நேரம் வரும்போது உங்களுக்கே தெரியும்!’’ என்று மல்லிகா தனது ட்விட்டரில் சஸ்பென்ஸ் வைத்திருப்பதுதான் பாலிவுட்டில் இப்போது பரபர!

எப்போதுமே தனது பெர்சனல் வாழ்க்கை பற்றி அவ்வளவாகப் பகிர்ந்து கொள்ள விருப்பம் இல்லாதவர் மல்லிகா. ஆனால், காரணமே இல்லாமல் அடிக்கடி நியூயார்க்குக்கும், மும்பைக்கும் பறப்பவர், ஒரு ரியாலிட்டி ஷோவில் ஜெயித்த விஜய்சிங் என்பவருடன் நெருக்கமாக இருந்து வந்தார். இப்போது அவரிடமிருந்து பிரிந்து விட்டதாகவும் சொல்கிறார்கள். எனவே இந்த காரைப் பரிசளித்தவர், இந்தியத் தொழிலதிபரா அல்லது நியூயார்க் நண்பரா என்று தெரியவில்லை என்கின்றன பாலிவுட் பட்சிகள்!

ஆனால், லம்போகினி இந்தியச் சாலைகளுக்கு செட் ஆகுமா மல்லிகா?

- தமிழ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!