அமிதாப் பச்சனுக்கு பத்ம விபூஷன் விருது ! | bathma v pushan award got by amitabh

வெளியிடப்பட்ட நேரம்: 15:33 (08/04/2015)

கடைசி தொடர்பு:17:45 (08/04/2015)

அமிதாப் பச்சனுக்கு பத்ம விபூஷன் விருது !

பில்கேட்ஸ், அமிதாப் பச்சன் உள்ளிட்டோருக்கு இன்று பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.

 குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் விருதுகளை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார். கலைத்துறைக்கு சிறப்பான பங்காற்றியதற்காக இந்தி நடிகர் அமிதாப் பச்சன், பத்ம விபூஷண் விருது பெற்றார்.

 இந்தியாவில் எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக சேவையாற்றிய மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ், சிறந்த பொது சேவைக்காக சுபாஷ் சி. காஷ்யப் உள்ளிட்டோருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.

 

 கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ் உள்ளிட்டோருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பத்ம ஸ்ரீ விருதுகளை வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியை அடுத்து ட்விட்டரில் Padma vibhushan என ட்ரெண்டாகியுள்ளது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close