இது ‘என் சாய்ஸ்’ - இது ரைட் சாய்ஸ்!

சமீபத்தில் தீபிகா படுகோனே நடிப்பில், வெளியான ‘மை சாய்ஸ்’ என்ற குறும்படம் பல்வேறு விமர்சனங்களை பெற்றுள்ளது. பெண்களின், சுதந்திரம், உடைகள், ஆணைத் திருமணம் செய்வதா, இல்லை பெண்ணை திருமணம் செய்வதா இதெல்லம் என் சாய்ஸ் என சொல்வது போல் அமைந்துள்ள அப்படம் பலரையும் பல கேள்விகளை கேட்க வைத்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரான சுப்ரமணியன் சுவாமி இதுகுறித்து தனது முகநுலில் கருத்து தெரிவித்துள்ளார். ‘எனது விருப்பம், என்பதை விட ‘சிறந்த விருப்பம்’ என இரண்டு உள்ளது.

’மை சாய்ஸ்’ என சொல்லிகொண்டு பெண்களின் வலிமையை அதிகப்படுத்தாமல், நாங்கள் எங்கள் விருப்பம் போல் இருப்பேன் என சொல்வது எப்படி நியாயம். அதே சமயம் உண்மையில் பெண்கள் வலிமையாகி வருகிறார்கள் என்பதற்கு சாய்னா நெஹ்வால், மேரி கோம் போன்றோர் சரியான ஆதாரமாக இருக்கிறார்கள். இதுதான் உண்மையில் பெண்களுக்கு இன்ஸிபிரேஷனாக இருக்கும்.

சமூகத்தில் பிரபலமாக இருப்பவர்கள் எதை மக்களூக்கு சொல்ல வேண்டுமோ அதையே சொல்ல வேண்டும். அந்த கடமை சமூகத்தில் உயர்ந்தவர்களும் உணர்ந்து செயல்படுவது அவசியம் என கூறியுள்ளார். பலரும் இதற்கு ஆதரவான கமெண்டுகளை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!