சல்மான்கானாக மாற ஆசைப்படும் சன்னிலியோன்!

பாலிவுட்டின் கவர்ச்சி பாம் என செல்லமாக அழைக்கபப்டும் சன்னிலியோனுக்கு தென்னிந்தியாவிலும் மவுசு அதிகம்.  ஜெய் நடித்த ‘வடகறி’ படத்தின் ஒற்றை பாடலுக்கு மட்டும் நடனம் ஆட பெருந்தொகை சம்பளமாக சன்னிலியோனுக்கு பேசப்பட்டது.

அதேபோல் தெலுங்கில் வெளியான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் ரீமேக்கில் ஒரு பாடலுக்கு குத்து நடனம் ஆட ஒரு கோடி சம்பளமாக தரப்பட்டது. இதுமட்டுமல்லாது இந்திய அளவில் சன்னிலியோனை ஒரு பாட்டுக்கோ அல்லது ஒரு காட்சியிலேனும் நடனம் ஆட வைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன.

மேலும் சன்னி லியோனை பாலிவுட்டின் பல பிரபல படங்களின் ப்ரோமோவிற்காகவும் பயன்படுத்துவது வழக்கம். சர்வ சதாரணமாக இவரது பாடல்கள் கோடிகளை யூ டியூபில் அள்ளும். கூகுள் தேடலிலும் சென்ற வருடம் அதிகம் தேடப்பட்ட நபராக முதலிடம் பிடித்தார்.

 

இந்நிலையில் சன்னிலியோன் நடித்து பிரம்மாண்ட பொருட்செல்வில் உருவான படம் ‘ஏக் பஹெலி லீலா’ . இப்படம் நாளை வெளியாகிறது. இதை முன்னிட்டு சமீபத்தில் எடுக்கபப்ட்ட ஒரு பேட்டியில் ,’ நான் இன்னொரு நபராக மாறும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக சல்மான்கானாக மாறுவேன் என நெகிழ்ச்சி பொங்க கூறியுள்ளார். அவரை குழந்தைகள், பெண்கள் என எல்லோருக்கும் பிடித்துள்ளது எனக்கும் அப்படித்தான் என கூறியுள்ளார்.

சன்னிலியோன் இந்தியாவில் முதன்முதலில் சல்மான் நடத்தும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் தான் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!