'அனுஷ்காவை குறைகூறுபவர்கள் வெட்கப்பட வேண்டும்!' - விராட் காட்டம்

உலகக் கோப்பையில் இந்திய அணியின் தோல்விக்கு அனுஷ்காவை குறை கூறுபவர்கள் வெட்கப்பட வேண்டும் என இந்திய அணியின் துணைக்கேப்டன் விராட் கோலி காட்டமாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், '' கடந்த ஐந்து ஆண்டுகளில் என்னைவிட யாரும் இந்திய அணிக்காக வெற்றி தேடி தரவில்லை. அவர்களது விமர்சனங்கள் என்னை மிகவும் காயப்படுத்தின. விமர்சனம் செய்தவர்கள் அவர்களாகவே வெட்கப்பட வேண்டும் என்பதை நான் ஒரு மனிதனாக கூறுகின்றேன்.

ஒரு போட்டியில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து வரும் எதிர்ப்புகளை பார்க்கையில் எனக்கு மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது. இது ரசிகர்கள் மீதான நம்பிக்கையை இழக்க செய்கிறது. வெற்றி தோல்வியின் போது நம்முடன் யார் யார் இருககிறார்கள் என்பதை இந்த சம்பவத்தினால் அறிந்து கொள்ள முடிந்தது" என்றார்.

உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி கண்டது. இந்த போட்டியில் இந்திய அணியின் துணைக்கேப்டன் விராட் கோலி, ஒரு ரன்னில் அவுட் ஆனார். இந்த போட்டியை விராட் கோலியின் காதலியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா நேரடியாக காண சிட்னி சென்றார்.

அனுஷ்காவின் போதாத நேரம், விராட் கோலி ஒரு ரன்னில் விக்கெட்டை பறிகொடுக்க, இந்திய ரசிகர்களின் கோபம் அனுஷ்கா மீது பாய்ந்தது. இதனால் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களில் அனுஷ்கா சர்மா கடுமையாக விமர்சிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!