ஷாருக்கானுக்கு குவியும் விருதுகள்!

பாலிவுட் பாட்ஷாவான ஷாருக்கான் “க்ளோபல் ஐகான் ஆஃப் த இயர்” விருது பெற்றுள்ளார். நேற்று மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் இவருக்கு விருது கொடுத்து பெருமைப் படுத்தியுள்ளனர்.

49 வயதுக்காரர் ஷாருக்கான் அடுத்தடுத்து பல விருதுகளை அள்ளிக் கொண்டிருக்கிறார். கடைசியாக வெளிவந்த ’ஹாப்பி நியூ இயர்’ படத்திற்கு சிறந்த எண்டர்டெய்னர் விருது உள்ளிட்ட பல விருதுகளை அள்ளியவர். அடுத்தடுத்து விருதுகள் குவிவதால் சந்தோஷத்தில் இருக்கிறார்.இந்த விருது பெற்றதற்கு நான் ரொம்ப பெருமையடைகிறேன். மேலும் பெரிய லெஜெண்ட்ரியாக என்னையே பார்க்க வைக்கிறது. உலகமே என்னை ஏற்றுகொண்டதற்கு நான் சந்தோஷப்படுகிறேன் என்றார் ஷாருக். அடுத்தென்ன ஆஸ்காரா ஷாருக்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!