விவசாயி தற்கொலை: நடிகர் ஷாருக்கான் ஆவேசம் | stop the blame game : Shahrukh's angry tweet for farmer suicide

வெளியிடப்பட்ட நேரம்: 15:01 (23/04/2015)

கடைசி தொடர்பு:15:01 (23/04/2015)

விவசாயி தற்கொலை: நடிகர் ஷாருக்கான் ஆவேசம்

டெல்லியில் ஆம் ஆத்மி பேரணியில் விவசாயி தற்கொலை செய்துக் கொண்ட விவகாரம் தொடர்பாக ஒருவருக்கு ஒருவர் பழி கூறிக்கொள்வதை நிறுத்திக் கொள்ளுமாறு நடிகர் ஷாருக்கான் ஆவேசத்துடன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக பாலிவுட் நாடிகர் ஷாருக்கான் வெளியிட்டுள்ள ட்விட் செய்தியில், "யாரும் தங்கள் வாழ்வை முடித்துக் கொள்வதற்காக தற்கொலை செய்வது கிடையாது. அவர்கள் தங்களது வேதனைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே தற்கொலை செய்து கொள்கின்றனர்.

ஒரு நொடி எடுத்து, அவர்களது வேதனையை உணர்ந்து பாருங்கள். அதனை தவிர்த்து ஆதாயம் தேட முயற்சி செய்யாதீர்கள். ஒருவர் மீது ஒருவர் பழி சுமத்துவதை நிறுத்திக் கொள்ளுங்கள்" என்று கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close