வெளியிடப்பட்ட நேரம்: 15:55 (24/04/2015)

கடைசி தொடர்பு:15:59 (24/04/2015)

காதலனுடன் போஸ் கொடுக்கும் சோனாக்‌ஷி சின்ஹா!

உலகமே எதிர்பார்த்த ரசிகர்களின் சூப்பர் ஹீரோஸ் எல்லோரும் ஒரே படத்தில் நடிக்கும் அவெஞ்சர்ஸ் இரண்டாம் பாகம் வெளியாகிவிட்டது.

அதிகப்படியான பட்ஜெட் எடுக்கப்பட்ட ஹாலிவுட் படங்களில் இதுவும் ஒன்று.  இப்படத்தின் ப்ரீமியர் ஷோவில் பாலிவுட்டின் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.  யாமி கெளதம், ஜெனிலியா, ’லிங்கா’ பட நாயகி சோனாக்‌ஷி சின்ஹா, ’ஆஷிக் 2’ பட நாயகி ஷ்ரதா கபூர் மற்றும் வருண் தவான் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இதில் அயன் மேனுடன் நின்று போஸ் கொடுத்துள்ளார் சோனாக்‌ஷி. மேலும் அயன்மேனுடன் நின்று புகைப்படம் எடுத்ததில் குஷியான சோனாக்‌ஷி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “ என் காதலனுடன் ” என்று ட்விட் செய்துள்ளார். அயன் மேனுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருப்பது நாம் அறிந்ததே. இந்நிலையில் சோனாக்‌ஷி சின்ஹாவும் தீவிர ரசிகை என்பதும் உறுதியாகியுள்ளது. 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் “அகிரா” படத்தில் தற்பொழுது நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.தமிழில் வெளியான ‘மௌன குரு’ படத்தி இந்தி ரீமேக் தான் ‘அகிரா’. இந்த படத்தில் அருள்நிதி கேரக்டரில் சோனாக்‌ஷி சின்ஹா நடிக்கிறார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்