சச்சின் பொண்ணு நடிக்க வருகிறார்..?

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் மகள் சாரா பாலிவுட் சினிமாவில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது 18 வயதாகும் சாரா நடிக்கவுள்ள பாலிவுட் படத்தில், சாகித் கபூர் ஜோடியாக நடிக்க போகிறார்.திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் படித்து வரும் சாரா, சினிமாவில் நடிக்க சச்சின் பச்சைக் கொடி காட்டி விட்டதாகவும் கூறப்படுகிறது.

பல கிரிக்கெட் போட்டிகளின் போது சாராவை சச்சினுடன் பார்க்க முடியும். சச்சின் ஓய்வு பெற்ற பிறகுதான் சாராவை அவ்வளவாக கிரிக்கெட் மைதானங்களில் காண முடிவதில்லை. 

சுமார் 5'2 இஞ்ச் உயரமுள்ள சாராவுக்கு பாலிவுட் படங்களை விரும்பி பார்ப்பவரும் கூட.தற்போது படிப்பில் கவனம் செலுத்தி வரும் சாரா , பாலிவுட்டில் கால் பதித்தால் நிச்சயம் வெற்றிகரமான நடிகையாக வலம் வருவார் என்று எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. 

சச்சின் - அஞ்சலி தம்பதியினரின் மூத்த மகள் சாரா. கடந்த 1997ஆம் ஆண்டு பிறந்த அவருக்கு, அர்ஜுன் என்ற சகோதரனும் உள்ளார்.

தந்தையை போல சாரா அமைதியான ஆள் கிடையாது. துறுதுறுவென வலம் வருபவர். எல்லோரிடமும் சகஜமாக பழகுபவர். ஒரு முறை  'டெல்லி பெல்லி' என்ற சினிமாவை பார்க்க சாரா மற்றும் அஞ்சலிக்கு நடிகர் அமீர்கான் அழைப்பு விடுத்திருந்தார்.அப்படிதான் சாராவுக்கு சினிமா ஆசை வந்திருக்கும் என்று கூறப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!