வெளியிடப்பட்ட நேரம்: 17:47 (25/04/2015)

கடைசி தொடர்பு:11:51 (27/04/2015)

அசராமல் நடித்த அனுஷ்கா! பாராட்டிய இயக்குநர்!

அனுஷ்கா ஷர்மா - ரன்பிர் கபூர் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் “பாம்பே வெல்வெட்”. இப்படத்தை பாலிவுட்டின் பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யாப் இயக்குகிறார். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் மே 15ல் வெளியாகவிருக்கிறது.

அனுஷ்கா ஷர்மா இப்படத்தில் ஜாஸ் பாடகராக நடிக்கிறார். இப்படத்திற்கான இவரின் அர்பணிப்பு படத்தின் டிரெய்லரிலேயே நாம் காணலாம். 1960 மையப்படுத்திய கதையம்சம் என்பதால் அதன் ஆடை வடிவமைப்பு, சிகை அலங்காரம் என்று ஒவ்வொன்றிற்கும் கடினமாக உழைத்திருக்கிறாராம்.

அவர் அணிந்துவரும் ஒவ்வொரு உடையுமே 30லிருந்து 35 கிலோ எடையுள்ள ஆடைகள். அந்த உடையிலேயே படப்பிடிப்பு முடியும் முழு நாளும் இருப்பாராம். மேலும் மேக்கப் செய்வதற்கே 4 மணிநேரம் வரை எடுப்பதால் ஹூட்டிங் நேரத்திற்கு முன்னரே வந்துவிடுகிறார் அனுஷ்கா ஷர்மா. அதனால் இயக்குநர் அனுராக் காஷ்யாப் மட்டுமில்லாமல் ஒட்டு மொத்த படக்குழுவுமே வியந்துவிட்டதாக அனுராக் கூறியுள்ளார். இந்த படத்திற்காக பிரத்யேகமாக முடியையும் கத்தரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்