பிரியங்காவைத் தொடர்ந்து சோனம் கபூர்!

பிரபலங்களில் வாழ்க்கை வரலாற்றை பாலிவுட்டில் படங்களாக எடுத்துவருகின்றனர். சமீபத்தில் பிரியங்கா மேரிகோம் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்தார். அதேபோல் பர்கான் அக்தர், இர்பான் கான் போன்றோரும் நடித்துள்ளனர்.

இவர்களைத் தொடர்ந்து சோனம் கபூரும் நடிக்கவிருக்கிறார். இவர் நிர்ஜா பனாட் வேடத்தில் நடிக்கவிருக்கிறார். தீவிரவாதிகளுக்கு எதிராக சண்டையிட்டவர் நிர்ஜா. 1986ல்  பான் ஆம் 76 ரக விமானத்தினை தீவிரவாதிகள் கடத்திவிட்டனர். அவர்களிடமிருந்து பயணிகளை காப்பாற்றியவர் மேலும் தன் உயிரையும் இழந்தார். இவரின் வீரதீர செயலே படமாக எடுக்கவிருக்கிறார்கள்.

சோனம் கபூரின் அம்மாவாக ஷபானா அஸ்மி நடிக்கிறார். பிரபல புகைப்படக் கலைஞர் அதுல் காஸ்பேக்கரின் முதல் தயாரிப்பாக இப்படம் வெளியாகவிருக்கிறது. படத்தின் பெயர் நிர்ஜா. ராம் மாதவானி இப்படத்தை இயக்கவிருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!