ராதிகா அப்தேவின் ஆபாச வீடியோ வெளியானதால் சர்ச்சை!

தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துவருபவர் ராதிகா ஆப்தே. தமிழில் தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா உள்ளிட்ட படங்களில் நடித்தவர். இவரின் ஆபாச வீடியோ லீக் அவுட் ஆனதால் இந்தியின் பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யாப் போலீசில் புகார் அளித்துள்ளார்.

அனுராக் காஷ்யாப் இயக்கிவரும் குறும்படத்தில் ராதிகா அப்தே நடித்துவருகிறார். 20 நிமிடம் ஓடக்கூடிய இக்குறும்படம் உண்மை சம்பவத்தை மையப்படுத்தியது. இதில் ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்திருக்கிறார். அந்த நிர்வாணக்காட்சியின் வீடியோ இணையத்திலும் வாட்ஸ் ஆஃப்பிலும் பரவி வருகிறது.  இதனால் ஒட்டுமொத்த படக்குழுவுமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

இதனால் கோபமடைந்த அனுராக் மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசாரும் யார் வெளியிட்டார் என்று தேடி வருகின்றனர்.

சர்வதேச சந்தையில் மட்டும் வெளியிட இருக்கும் இக்குறும்படத்தின்  நிர்வாணக் காட்சியை  பெண்கலைஞர்களே படமாக்கினார். அதுமட்டுமில்லாமல் மீதி வேலைக்கு கூட இந்த வீடியோவை கட்டுப்பாடுகளுக்கு நடிவிலேயே உபயோகித்து வந்தோம் என்று கூறினார் அனுராக்.  இதற்கு நடுவே ஆபாச வீடியோ வெளியானதால் மன உளைச்சலில் இருக்கிறார் இயக்குநர் அனுராக் காஷ்யாப்.

இதற்கு முன்னரே இவரின் நிர்வாணமாக செல்ஃபி இணையத்தில் பரவியதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மீண்டும் பரவியதால் கோவத்தில் இருக்கிறாராம் ராதிகா ஆப்தே.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!