சல்மான் கானுக்கு சிறை: தயாரிப்பாளர்கள் கதி என்ன? | Salman Khan jailed for 5 years : what about the 200c?

வெளியிடப்பட்ட நேரம்: 12:14 (07/05/2015)

கடைசி தொடர்பு:12:40 (07/05/2015)

சல்மான் கானுக்கு சிறை: தயாரிப்பாளர்கள் கதி என்ன?

 மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய காரணத்திற்காக சல்மான் கானுக்கு 5 வருட சிறை தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது இருக்கும் நிலையில் சல்மானுக்கு பெயில் கிடைக்குமா என்பதும் கேள்விக்குறியாகியுள்ளது. 

இந்நிலையில் சல்மான் கான் மூன்று படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். சல்மான் கானின் சொந்த தயாரிப்பான ’பஜ்ராங்கி பைஜான்’ இப்படத்தை கபீர் கான் இயக்குகிறார்,  சூரஜ் பஜ்ராத்யா இயக்கத்தில்  ’பிரேம் ரத்தன் தன் பயோ ’ மற்றும் தபாங்-3 என இப்படங்களின் பட்ஜெட் மட்டும் 200 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. 

இப்படங்களில் பஜ்ராங்கி பைஜான் மற்றும் ’பிரேம் ரத்தன் தன்’ என இவ்விரு படங்களும் பாதி படப்பிடிப்பில் உள்ளன. சல்மான் சிறைக்கு செல்லும் நிலையில் இப்படங்களின் நிலை என்ன என பாலிவுட் தரப்பில் கேள்விகள் எழுந்துள்ளன. 

இதுதவிர்த்து கலர்ஸ் சேனலில் சல்மான் நடத்தும் பிரபல டிவி நிகழ்ச்சியான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் கதியும் சரிவர தெரியவில்லை.  இதற்கு முன்பு சிறையில் இருந்த சஞ்சய் தத் ‘பிகே’ படத்திற்காக பரோலில் வெளியில் வந்து நடித்துக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. எனினும் அது குறிப்பிட்ட கேரக்டர் என்ற நிலையில் மிகச்சில காலங்களில் முடிந்துவிடும். 

சல்மானின் கதை வேறு, அவருடைய கால்ஷீட்டின் படி இப்படங்களை முடித்துக் கொடுக்க 2017ம் ஆண்டு வரை கால அவகாசம் தேவை என்பதால் தயாரிப்பு தரப்பில் சிக்கலான நிலை உருவாகியுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close