அறை வாங்கிய வித்யாபாலன் | Vidya Balan Got Slap

வெளியிடப்பட்ட நேரம்: 14:46 (08/05/2015)

கடைசி தொடர்பு:14:51 (08/05/2015)

அறை வாங்கிய வித்யாபாலன்

மோஹித் சூரி இயக்கத்தில் வித்யா பாலன், இம்ரான் ஹாஷ்மி, ராஜ்குமார் ராவ் நடிக்கும் இந்தி  படம் ‘ஹமாரி அதுரி கஹானி’. படத்தை தயாரிக்கிறது விஷேஷ் பிலிம்ஸ். மேலும் ரிலீஸ் செய்கிறது ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ். 

குடும்பம், கணவன் மனைவி உறவு, என சிக்கலான கதையம்சம் கொண்ட இப்படம் ஜூன் 12ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் படத்தின் டிரெய்லர் ஓரிரு தினங்களுக்கு முன்பு வெளியாகியுள்ளது. எதையுமே வித்யாசமாக செய்யும் வித்யா பாலன் இப்படத்திற்காக அறை வாங்கியுள்ளார்.

படத்தின் ஒரு காட்சியில் வித்யாபாலன், ராஜ்குமார் ராவ் இருவருக்கும் சண்டை வலுவாகி வித்யா பாலன் கன்னத்தில் ராஜ்குமார் ராவ் பளார் என அறைவது போல் காட்சி உள்ளது. இந்த காட்சி எடுக்கும் போது டேக் சொன்னதும் ராஜ்குமார் , வித்யா பாலன் கன்னத்தில் உண்மையிலேயே ஓங்கி அறைந்து விட்டாராம். 

ஒரு நிமிடம் மொத்த படக்குழுவும் அதிர்ச்சியில் உறைந்து போக, பிறகு வித்யா பாலன் காட்சியை முடித்துவிட்டு கூலாக வந்து நான் தான் அறைய சொன்னேன். காட்சி இயல்பாக வர வேண்டும் என்பதற்காக நானும் ராஜ்குமாரும் இணைந்து தான் இந்த முடிவு எடுத்தோம் என கூறியுள்ளார். 

படக்குழு முழுக்க வித்யா பாலனை பாராட்டி வருகிறார்கள். இந்த ஒற்றைக் காட்சி சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரெய்லரில் கூட இடம்பிடித்துள்ளது. 

 டிரெய்லரைக் காண:  

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close