வெளியிடப்பட்ட நேரம்: 15:57 (11/05/2015)

கடைசி தொடர்பு:16:10 (11/05/2015)

வதந்திகள் செய்தியாகிறது, 2016 இல் காத்ரினா கைஃப்புக்குக் கல்யாணம்

பாலிவுட்டின் ஸ்டார் காதலர்களான ரன்பிர் கபூரும் காத்ரீனா கைஃப்பும் அடுத்த வருட இறுதிக்குள் திருமணம் செய்யப்போவதாக ரன்பிர் கபூர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

பல வருடங்களாகக் காதலித்து வந்த பாலிவுட் ஸ்டார்ஸ் ரன்பிர் கபூர் மற்றும் காத்ரீனா கைஃப். இருவருமே தாங்கள் காதலித்த விஷயத்தை சொல்லாமலே மறைத்து வந்தனர். தற்பொழுது ரன்பிர் நாங்கள் காதலித்தது உண்மைதான். இருவரும் திருமணத்திற்கு தயாராகிவிட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

“ இந்த வருடம் முழுவதும் எனக்கு அதிகப்படியான வேலைப்பளு. அதனால் இந்த வருடம் இல்லாமல் அடுத்தவருடம் நாங்க கல்யாணம் பண்ணிக்கபோறோம். எனக்கு இப்போவே 33 வயதாகிறது. எனக்குனு ஒரு குடும்பம் வேணும். அது போலத்தான் காத்ரீனாவிற்கும். அதனால் 2016ல் கல்யாணம் கன்பார்ஃம்” என்றார் ரன்பிர் கபூர்.

ராஜ்குமார் சந்தோஷி இயக்கத்தில் வெளியான “அஜப் ப்ரேம் கி ஹசாஃப் கஹானி” படத்தின் இணைந்து நடிக்கும் போதே காதலித்தார்களாம். அப்போதே சேர்ந்து சுத்தியிருக்கிறார்கள். அதிகமாக வதந்திகளும் அப்போது வெளிவந்தன. வதந்திகளை நிஜமாக்கி இல்லற வாழ்வில் இணையப்போகிறது இந்த லவ் பேர்ட்ஸ்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்