சன்னி லியோன் மீது வழக்கு!

இணையத்தில் சன்னிலியோன் குறித்த ஆபாச படங்கள், புகைப்படங்கள் இணையம், மற்றும் சமூக வலைகளில் அதிகம் பகிரப்படுகிறது. மேலும் அவரே சில புகப்படங்களை பகிர்கிறார் என சன்னி லியோன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

இந்தி நடிகை சன்னி லியோன் படங்கள் என்றாலே கவர்ச்சி சார்ந்த காட்சிகள் சற்றே அதிகமாக இருக்கும். இந்நிலையில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஏக் பஹெலி லீலா மற்றும் குச் குச் லோச்சா ஹை உள்ளிட்ட படங்களின் புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

கூகுள் தேடலிலேயே கடந்த இரண்டு வருடமாக சன்னி லியோன் முதலிடம் பிடித்து வருகிறார். இந்நிலையில் சன்னி லியோன் தனது ட்விட்டர்  உள்ளிட்ட பக்கங்களில் அவரது ஆபாச படங்களை அதிகம் பரப்பி வருவதாகவும் இது நமது இந்திய கலாச்சாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் எனவும்  கூறி மும்பையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் சன்னி லியோன் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை பதிவு செய்த போலீசார், மேல் விசாரணைக்காக சைபர் குற்றப்பிரிவிற்கு அனுப்பி வைத்துள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!