வெளியிடப்பட்ட நேரம்: 16:10 (20/05/2015)

கடைசி தொடர்பு:16:59 (20/05/2015)

இந்தியில் ரீமேக்காகிறது ‘கல்யாண சமையல் சாதம்’

பிரசன்னா, லேகா வாஷிங்டன் நடிப்பில் ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கத்தில் வெளியான படம் ‘கல்யாண சமையல் சாதம்’. தமிழ் சினிமாவில் இதுவரை பேசப்படாத ரோமாண்டிக் பக்கங்களை சற்றே புரட்டிய படம்.பிரசன்னா மிக தைரியமாக எடுத்துக்கொண்ட கேரக்டர் என பலராலும் பாராட்டப்பட்டது என்றாலும் பிராமணச் சடங்குகள், சம்பிரதாயம் என படத்தின் வெற்றிக்கு அது சற்றே இடையூறாக அமைந்துவிட்டது.

தற்போது இந்த படம் இந்தியில் ரீமேக்காக உள்ளது. ஆர்.எஸ். பிரசன்னா இயக்க உள்ள  இந்தப் படத்தை இந்தியில் ஆனந்த் எல்.ராய் தயாரிக்கிறார். ஹீரோவாக இம்ரான் கான் மற்றும் ஹீரோயினாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார்கள். 

ஸ்ருதி ஹாசன் , இம்ரான் கான் ஏற்கனவே இந்தியில் வெளியான ‘லக்’ படத்தில் இணைந்து நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஸ்ருதி ஹாசன் நடித்த லக் படம் தான் அவரது அறிமுக படம் என்பது சிறப்புச் செய்தி. இந்தியில் எதையுமே சற்று அதிகமாகவும், கலர்ஃபுல்லாகவும் காண்பிப்பார்கள் என்பதால் இந்த படம் வெற்றியடையும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்