Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிகே பியூட்டி

நாட்டுக்காக உழைத்த கர்னல் அஜய் குமார் சர்மாவை எத்தனை பேருக்குத் தெரியும்? வீட்டுக்கு ஆற்றிய தொண்டால்தான் நான் அவரை தலையில் வைத்துக் கொண்டாடுகிறேன். இருக்காதா பின்னே, உள்ளம் கவர் அழகி அனுஷ்கா சர்மாவைப் பெற்றெடுத்த அப்பாவாயிற்றே!

இந்தக் கட்டுரையை நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும்போது ‘பாம்பே வெல்வெட்’ படத்தையும் சேர்த்து பத்தே படங்களில் புகழின் உச்சத்துக்குச் சென்ற நடிகையாக அறியப்படுவார் அனுஷ்! நடிகைகளுக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கும் அப்படி என்ன பொருத்தமோ, சுரேஷ் ரெய்னா, தினேஷ் கார்த்திக் என அனுஷ்கா சர்மா பெயர் மீடியாக்களில் ஏலம் விடப்பட்டது. ஆனால், பின்பு விராட் கோஹ்லியோடு மட்டும்தான் தனக்கு உண்மையான காதல் என ஸ்டேட்மென்ட் கொடுத்தார். பொண்ணு லவ் மேட்டரில் எத்தனை சீரியஸ் என்பதை உலகக் கோப்பை செமி ஃபைனலுக்கு ஆஸ்திரேலியா பறந்ததை வைத்தே தெரிந்துகொள்ளலாம்.

‘‘விராட் அவுட் ஆனதும் இந்தியா முழுமையும் சோஷியல் மீடியாக்களில் எனக்கு எதிராக திரும்பியது அப்போது அதிர்ச்சியாக இருந்தது. வருத்தம் தந்தாலும் யார் மீதும் எனக்குக் கோபம் இல்லை. எத்தனை பேரும் புகழும் இருந்தாலும் ஒரு நடிகை என்ற பார்வையே இங்கு வேறு. வங்கி அதிகாரியாகவோ, சாதாரண ஊழியராகவோ நான் இருந்திருந்தால் இப்படிச் செய்ய மாட்டர்கள். புகழுக்கென சில விலைகள் கொடுக்க வேண்டி இருக்கு’’ என செம முதிர்ச்சியாய் 27 வயது அனுஷ்கா பேசியது ஆச்சர்யம்தான். ‘‘விராட்டை நான் எந்தச் சூழலிலும் விட்டுத்தரப் போவதில்லை. மீடியாக்கள்தான் எங்களுக்குள் அடிக்கடி பிரேக் அப் ஆனதாக எழுதுகிறார்கள். அண்மையில்கூட ஒரு பத்திரிகையின் அட்டைப்படத்தில் வந்த என் போட்டோ கவர்ச்சியாக இருந்ததாக நாங்கள் இருவரும் சண்டை போட்டதாகச் சொன்னார்கள். அப்படி எந்தச் சம்பவமும் இதுநாள்வரை நிகழ்ந்ததில்லை. விராட்டுக்கும் எனக்கும் ஆழமான புரிதல் இருக்கிறது. அவர் விளையாட்டிலும் நான் சினிமாவிலும் இவ்வளவு உயரத்துக்கு வந்ததற்குப் பின் நிறைய உழைப்பு இருக்கிறது.

தன் தந்தை இறந்தபோது களத்தில் விளையாட வந்தவர் அவர். எத்தனையோ அவமானங்கள், தோல்விகளுக்கு அப்புறம்தான் இந்த இடத்துக்கு வந்திருக் கிறார். காதலிப்பதாலேயே ஒரு நல்ல பிளேயரை இப்படி அவதூறு சொல்வது அவரை அவமானப்படுத்துவதைப்போல’’ என்கிறார். லிவிங் டுகெதர் வாழ்க்கையைப் பற்றியும் ஓப்பனாகவே இருக்கிறார். மும்பையில் இருக்கும் பாம்பே கார்ட்டர் ரோடில் அப்பார்ட்மென்ட் எடுத்து விராட்டுடன் ஒன்றாக வசிப்பதாகத் தன் திரையுலக நண்பர்களிடம் ஷேர் செய்திருக்கிறார். ‘‘மீடியாவுக்கு என் பெர்ஷனல் விஷயங்களை சொல்ல வேண்டிய அவசியமில்லை. துப்பறிந்து எழுதினால் எழுதிக்கொள்ளட்டும்’’ என்றார் ‘பாம்பே வெல்வெட்’ புரொமோஷன் விழாவில்! ‘என்.ஹெச் 10’ படத்தில் ஆக்‌ஷன் அவதாரத்தோடு தயாரிப்பாளராகவும் களத்தில் குதித்து வெற்றி அடைந்ததால், அடுத்தடுத்து சின்னச் சின்ன பட்ஜெட் படங்களைத் தயாரிக்க முடிவெடுத்திருக்கிறார்.

கடைசியாய்... இணையத்தில் தன் உதட்டை ‘அக்லி டக்லி’ என கிண்டலடிப்பவர்களைப் பார்த்து இப்படிச் சொல்கிறார். ‘‘என் அப்பா சின்ன வயதிலிருந்தே கிண்டல் செய்வார். பிறகு அதுதான் அழகு என்று கொஞ்சுவார். இப்போது என் ரசிகர்களுக்கு என் உதடுகள் மீதுதான் பெரும் காதல். அக்லி பியூட்டிதான் நான்’’ என்கிறார். ‘பிகே’ படத்துக்கு முன் இவர் உதடு வேறு வடிவத்தில் இருந்தது எனவும், இடையில்தான் உதட்டில் ஆபரேஷன் செய்து இப்படி ஒரு உதட்டை பெற்றுவிட்டார் என்றும் நெட்டிசன்கள் போட்டோக்கள் போட்டு இணையத்தில் கொலவெறியாக எழுதிவருகிறார்கள். ஓப்பன் டாக் பேபி ‘டக்’குனு பேசுமா?

- ஆர்.சரண்- 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்