வெளியிடப்பட்ட நேரம்: 16:31 (26/05/2015)

கடைசி தொடர்பு:16:39 (26/05/2015)

ஷாருக்கான் வெளியிட்ட சல்மான்கான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

 சக நடிகரின் டிரெய்லர், டீஸரையோ, அல்லது ஃபர்ஸ்ட் லுக்கையோ வெளியிடுவது பெரிய விஷயம் அல்ல. நம் தமிழ் சினிமா துவங்கி மற்ற மொழிகளிலும் இது நடந்துகொண்டுதான் இருக்கிறது. 

எனினும் ஒரு டாப் ஹீரோ மற்றொரு டாப் ஹீரோவின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுவது என்பது மிகப்பெரிய விஷயம் என்றே சொல்லலாம். இந்நிலையில் சல்மான்கானின் அடுத்த படமான ’பஜ்ராங்கி பைஜான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் போஸ்டரை ஷாருக்கான் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

கபிர் கான் இயக்கத்தில், சல்மான் கான் , கரீனா கபூர்  நடிப்பில் உருவாகிவரும் படம் ’பஜ்ராங்கி பைஜான்’. படத்துக்கு இசை ப்ரிதம். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்காக டீஸர் போஸ்டர் இன்று ஷாருக்கானால் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது.  ன ட்விட்டரில் தற்போது டிரெண்டாகியுள்ளது. இதன் முழுமையான போஸ்டர் நாளை வெளியாக உள்ளது.

போஸ்டரில் சல்மானின் முகத்தில் பாதி மட்டும் தெரியும்படியும், ஒரு குர்தாவின் மீது போடப்பட்ட காபி கலர் ஸ்வெட்டர், மற்றும் கழுத்தில் கதை டாலர் என இறுக்கமான முகத்துடன் சல்மான் இருப்பது போல் அப்படத்தில் அமைந்துள்ளது. தற்போது ரசிகர்கள் இப்படத்தின் முழுமையான போஸ்டருக்காக காத்திருக்கின்றனர். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்