‘‘ஆக்‌ஷன் படம் பண்ணலாமா?’’ - சல்மானுக்கு ஹாலிவுட் நடிகர் சில்வஸ்டர் ஸ்டாலோன் ட்வீட்! | Can we do Action film together - Sylvester Stallone calling Salman Khan

வெளியிடப்பட்ட நேரம்: 18:25 (26/05/2015)

கடைசி தொடர்பு:18:30 (26/05/2015)

‘‘ஆக்‌ஷன் படம் பண்ணலாமா?’’ - சல்மானுக்கு ஹாலிவுட் நடிகர் சில்வஸ்டர் ஸ்டாலோன் ட்வீட்!

டிரங்க் அண்ட் டிரைவ் கேஸில் மீண்டு வந்த உற்சாகம் தவிர்த்து, மேலும் ஓர் உற்சாகத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறார் பாலிவுட் நடிகர் சல்மான்கான்.

உற்சாகத்துக்குக் காரணம் - ஹாலிவுட் நடிகர் சில்வஸ்டர் ஸ்டாலோன். ‘‘உங்களுடன் சேர்ந்து படம் பண்ண வேண்டும் என்று ஆசை! உங்கள்  'டபாங்' படம் என்னை மிகவும் கவர்ந்தது! நாம் இருவரும் இணைந்து விரைவில் ஓர் ஆக்‌ஷன் படம் பண்ண வேண்டும்!’’ என்று ட்விட்டர் மூலம் தனது ஆசையைத் தெரிவித்திருக்கிறார் சில்வஸ்டர் ஸ்டாலோன். வலிய வந்து இவர் சல்மானுக்கு ட்வீட்டியதற்குக் காரணம் இருக்கிறது. ட்விட்டரில் 12 மில்லியன் ஃபாலோயர்களைக் கொண்டவர் சல்மான்கான்.

கொஞ்ச நாட்களுக்கு முன்பு ட்விட்டரில் தனது ரசிகர்களுக்கு, ‘‘என்னை மிகவும் கவர்ந்த ஹீரோ சில்வஸ்டர் ஸ்டாலோன். நீங்கள் ஹாலிவுட் நடிகர் யாரையாவது ஃபாலோ பண்ண நினைத்தால், சில்வஸ்டரை ஃபாலோ பண்ணுங்கள். அது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். ஏனென்றால், அவர் எனக்கு மட்டும் ஹீரோ இல்லை; ஹீரோவுக்கெல்லாம் ஹீரோ!’’ என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதைக் கவனித்த சில்வஸ்டர், மகிழ்ச்சியடைந்து சல்மான் லேட்டஸ்ட்டாக நடித்த டபாங், கிக் போன்ற படங்களைப் பார்த்துவிட்டு, மேற்படி ட்வீட்டியிருக்கிறார். அப்போ, ‘எக்ஸ்பெண்டபிள்ஸ் பார்ட்-4’ல் சல்மானுக்கு ஒரு துப்பாக்கி ஒதுக்கி வெச்சிடுங்க!

- தமிழ் -

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close