அமிதாப்பை அவமதித்தாரா தீபிகாபடுகோன்?

அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே மற்றும் இர்பான் கான் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த படம் பிகு. குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு உலகளவில் 100 கோடிக்கும் மேல் வசூல் சாதனையைப் படைத்தது பிகு படம். இதில் தீபிகாவிற்கு தந்தையாக அமிதாப் பச்சன் நடித்திருப்பார். இவரின் நடிப்பே இந்தப் படத்தின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது.

சமீபத்தில் பிகு படத்திற்கான சக்ஸஸ் பார்ட்டியை தீபிகா மற்றும் அவரின் காதலன் ரன்வீர் சிங்குடன் இணைந்து  ஏற்பாடு செய்திருந்தார். மேலும் பாலிவுட்டின் பிரபலங்களான ஷாருக்கான், அலியாபட், கரன்ஜோகர், சித்தார்த் மல்கோத்ரா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.  ஆனால் நிகழ்ச்சியில் முக்கியமான ஒருவர் மட்டும் காணவில்லை என்று பாலிவுட்டே ஆச்சரியத்தில் திகைத்தது.

படத்தின் வெற்றிக்குக் காரணமே அமிதாப் பச்சன் தான். ஆனால் வெற்றி விழாவில் அமிதாப் பச்சன் மட்டும் கலந்துகொள்ளவில்லை. ஏன் நீங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று அமிதாப்பிடம் கேட்டதற்கு “ என்னை அழைக்கவில்லை” என்று ஒரே வார்த்தையில்  முடித்துவிட்டாராம். பிகு வெற்றிக்காக நீங்கள் தனிப்பட்ட வகையில் நிகழ்ச்சி ஏதும் ஏற்பாடு செய்யவிருக்கிறீர்களா என்று கேட்டதற்கு, “ தனிப்பட்ட வகையில் நான் எந்த பார்ட்டியையும் நடத்த மாட்டேன்.   பார்ட்டி, ஏதேனும் நிகழ்ச்சி என்று கூப்பிட்டால் தவறாமல் கலந்துகொள்வேன்” என்று சொல்லியிருக்கிறார்.

ஏன் அமிதாப்பச்சன் பிகு வெற்றி விழாவில் கலந்துகொள்ளவில்லை? ஏன் தீபிகா படுகோனே அமிதாப் பச்சனை நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை? அமிதாப்பை தீபிகா அவமதித்துவிட்டாரா?  என்கிற பலகேள்விகளுக்கு விடை தெரியாமல்  பாலிவுட் பிரபலங்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்களாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!