யோகா தூதராக அமிதாப் பச்சன்!

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, யோகா தூதராக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் உள்ளிட்ட பாலிவுட்டின் முக்கிய பிரபலங்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட உள்ளது.

இந்த தினத்தின் சிறப்பாக பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி ஒன்று நடக்க உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல அரசியல் , சினிமா முக்கியஸ்தர்கள்  பங்கேற்க உள்ளனர். டெல்லியில் காலை 7 மணிக்கு ஆரம்பிக்கப்பட உள்ள இந்த யோகா நிகழ்ச்சியில், 40,000க்கும் அதிகமானோர் பங்கேற்க உள்ளனர்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், அக்‌ஷய் குமார், ஷில்பா ஷெட்டி, கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி, மல்யுத்த வீரர் சுஷில் குமார் ஆகியோர் வர்த்தக தூதர்களாக நியமிக்கப்பட உள்ளனர். இவர்கள் தலமையில் விழா நடக்க உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!