வெளியிடப்பட்ட நேரம்: 15:59 (10/06/2015)

கடைசி தொடர்பு:16:04 (10/06/2015)

ரஜினி படத்தை பார்க்க மொழி தேவையில்லை..நசிருதீன் ஷா!

 மூன்று தேசிய விருதுகளை பெற்ற இயக்குநர், நடிகர், நசிரூதின் ஷா சென்ற ஞாயிறு அன்று ஐன்ஸ்டீன் என்னும் மேடை நாடகத்தில் நடித்திருந்தார். இதை முன்னிட்டு அவர் பேசிய போது  ஐன்ஸ்டீன் வாழ்க்கையை சுருக்கச் சொல்லும் நாடகமே ஐன்ஸ்டீன் எனக் கூறியுள்ளார்.

தேசிய விருது பெற்ற நடிகரான நசிருதீனுக்கே சவாலான பாத்திரமாக இருந்ததாம் இந்த ஐன்ஸ்டீன். ”ஐன்ஸ்டீன் பாத்திரத்தின் சவாலான விஷயமே மொழிதான். அவர் ஜெர்மன் மொழியை பேசுவார். அச்சு பிறழாமல் ஜெர்மன் பேச வேண்டிய நிலை எனக்கு” . மிகவும் கடினமாக இருந்தது என நசிரூதீன் ஷா கூறியுள்ளார்.

அவரிடம் தமிழ் படங்கள் பார்த்ததுண்டா என கேள்வி எழப்பப்பட்டது. அதற்கு ‘ நான் தமிழ் படங்கள் பார்த்ததில்லை ஏனெனில் எனக்கு தமிழ் தெரியாது. ஆனால் ரஜினிகாந்தின் படங்கள் சில பார்த்திருக்கிறேன். அவரது படங்களை புரிந்துகொள்ள மொழி தேவையில்லை. மணிரத்னம் இயக்கிய ஓகே கண்மணி படம் பார்க்கவிரும்புகிறேன்’ எனக் கூறியுள்ளார் நசிருதீன் ஷா. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்