வெளியிடப்பட்ட நேரம்: 15:58 (12/06/2015)

கடைசி தொடர்பு:16:05 (12/06/2015)

தில்வாலே படத்தில் நடிக்கும் சந்தோஷத்தில் ஷாருக்கான்! காரணம் என்ன?

சென்னை எக்ஸ்பிரஸ், சிங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இந்தியின் பிரபல இயக்குநர் ரோஹித் ஷெட்டியின் அடுத்தப்  படம் தில்வாலே. இப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் ஷாருக்கான்.

சென்னை எக்ஸ்பிரஸ் படத்திற்குப் பிறகு மீண்டும் ரோஹித் டீமுடன் படத்தில் பணிபுரிய இருப்பதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் ஷாருக். அந்த சந்தோஷத்தை வெளிப்படுத்தும் விதமாக ட்விட்டரில் ட்விட் செய்திருக்கிறார்.  “ இது தில்வாலே நேரம். எப்போதும் சிரிப்புடன் இருக்கும் ரோஹித் டீமை பார்க்க ஆவலுடன் இருக்கிறேன். நீண்ட வருட காத்திருப்பிற்கு பின் மீண்டும் கொண்டாட்டம் ஆரம்பம்” என்று ஷாருக் ட்விட் செய்ய அவர்களின் ரசிகர்கள் மத்தியில் வைரலடித்தது.

புல்ஹாரியா, ஷோஃபியா உள்ளிட்ட நாடுகளில் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது. அதற்காக புல்ஹாரியா நாட்டிற்கு சென்றிருக்கிறார் ஷாருக். ஏற்கெனவே தில்வாலே படத்தின் படப்பிடிப்பு தொடங்கி முதல் பாதி முடிந்துவிட்டது. இன்னும் ஜூன் 23 வரை படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறதாம். காஜோல், வருண் தவான் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் உடன் நடிக்கின்றனர்.

ஏற்கனவே ஷாருக் கான், கஜோல் கூட்டணியில் அமைந்த படங்கள் என்றாலே இந்தி ரசிர்கள் மட்டுமல்லாமல் மற்ற மொழி ரசிகர்களுக்கும் பிடிக்கும். இப்போது மீண்டும் அதே ஜோடி களம் இறங்குவதால் ரசிகர்கள் ஏக கொண்டாட்டத்தில் உள்ளனர். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்