முடிவில்லாத நமது கதை என்பது தான் இதன் அர்த்தம் - 'ஹமாரி அதூரி கஹானி' படம் ஓர் அலசல்! | Hamari Adhuri Kahani Movie - Review

வெளியிடப்பட்ட நேரம்: 14:29 (15/06/2015)

கடைசி தொடர்பு:18:00 (16/06/2015)

முடிவில்லாத நமது கதை என்பது தான் இதன் அர்த்தம் - 'ஹமாரி அதூரி கஹானி' படம் ஓர் அலசல்!

மாரி அதூரி கஹானி' முடிவில்லாத நமது கதை என்பது தான் இதன் அர்த்தம். சமீபத்தின் பாலிவுட் லவ்வாகியா சினிமா.

இது ஒரு உண்மைக் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சினிமா. நானாபாய் பட், அதாவது முகேஷ் பட், மகேஷ் பட், ராபின் பட் இவர்களின் தந்தை தான் நானாபாய் பட். இன்னும் புரியலையா நம்ம அலியா பட்டுடைய தாத்தா.

அவர் வாழ்க்கைல நடந்த காதல் கதை தான் இந்த சினிமா. நிஜமும் கற்பனையும் கலந்து மகேஷ் பட் படத்தின் கதையை எழுதியிருக்கார். அதாவது அப்பாவின் கதையை மகன் எழுதியிருக்கிறார்.

வசுதா (வித்யாபாலன்) தந்தையின் வற்புறுத்தலால் ஹரியை (ராஜ்குமார் ராவ்) திருமணம் செய்து கொள்கிறார். ஒரு மாத கைக்குழந்தையுடன் வித்யாபாலனை தவிக்கவிட்டு காணாமல் போய்விடுகிறார் கணவர் ராஜ்குமார்.

ஐந்து வருடத்திற்குப் பிறகு அவர் ஒரு தீவிர வாத கும்பலுடன் தொடர்பு இருக்கிறது என்ற செய்தி வருகிறது. இதற்கு இடையில் வித்யாபாலன் ஃப்ளவரிஸ்டாக வேலைசெய்யும் நட்சத்திர விடுதியின் உரிமையாளர் ஆரவ்விற்கு (இம்ரான் ஹாஸ்மி) வித்யா மீது காதல் வருகிறது. பின்பு வித்யாவுக்கும் காதல் வர இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார்கள்.

அப்போது ராஜ்குமார் ராவின் என்ட்ரி. அதன் பிறகு என்ன ஆகிறது என்பது க்ளைமாக்ஸ். படத்தின் ஒன் அண்டு ஒன்லி அட்ராக்ஷன் வித்யாபாலன் மட்டும் தான். இம்ரான் ஹாஸ்மியின் காதலை ஏற்றுக் கொள்வதா வேண்டாமா எனக் குழம்புவதும் பின் ஏற்றுக் கொள்வதும், ராஜ்குமாரிடன் இம்ரான் பற்றிக் நடுங்கிக் கொண்டே கூறி அறை வாங்குவதும், கடைசியில் ராஜ்குமாரை எதிர்த்து தைரியமாகப் பேசுவதுமாக நடிப்பில் அசத்துகிறார்.

பிரிந்துவிடலாம் என வித்யாபாலன் கூறும் போது கலங்கிப் போகும் இம்ரானும், தன் மனைவி வேறு ஒருவனைக் காதலிக்கிறாள் என்று தெரியும் போது கோபத்தில் பிதற்றும் ராஜ்குமார் ராவும் மனதில் நிற்கிறார்கள்.

விஷ்ணு ராவ் ஒளிப்பதிவு, மிதுன், ஜீத் கங்குலி, அமி மிர்ஷா இசையில் பாடல்களும் படத்தின் பெரிய பலம். அதிலும் ஹசி பாடல் அரிஜித் சிங் குரலிலும் சரி, ஸ்ரேயா கோஷல் குரலிலும் சரி சமீபத்திய டாப் 10 இந்தி பாடல்களில் ஒன்றாக திகழ்கிறது.

வழக்கமான ஒரு கதை தான். இதற்கு இத்தனை மெனக்கெடல் அவசியமே இல்லை. வித்யாபாலன் போன்ற திறமைசாலியும், உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது என்ற பில்டப்பிகளும் இந்த படத்திற்குத் தேவையா என்ற எண்ணம் மட்டும் படம் முடிந்து வருகையில் தோன்றுகிறது.

- பா.ஜான்சன் -

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close